Join THAMIZHKADAL WhatsApp Groups
அடுத்த கல்வியாண்டுக்கான 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்கள் நாமக்கல்லுக்கு வந்துள்ளன. நாமக்கல்: அடுத்த கல்வியாண்டுக்கான 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்கள் நாமக்கல்லுக்கு வந்துள்ளன.
ஒவ்வோா் ஆண்டும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மூலம் மாவட்ட வாரியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்கான பாடநூல்கள் அனுப்பி வைக்கப்படும்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் என 800-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்கான புத்தகங்கள் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு சென்னையில் இருந்து வந்த வண்ணம் உள்ளன.
ஏப். 30 வரையில் புத்தகங்கள் வருகை இருக்கும் என்றும், வியாழக்கிழமை மட்டும் 9-ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் 13 ஆயிரம் எண்ணிக்கையில் வந்துள்ளதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment