Join THAMIZHKADAL WhatsApp Groups
பல்வேறு வகை உணவுகள் இருந்தாலும் அவற்றில் சில உணவு வகைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக காணப்படுகிறது.
உணவின் தரமானது அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை பொறுத்து அமைகிறது. அந்த வகையில் கீரை வகை உணவுகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து, நார்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், போலிக் அமிலம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பதிவில் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை முழுமையாக தர கூடிய 6 கீரை வகைகளை பற்றி பார்ப்போம்.
புதினா : புதினா என்றாலே அதன் மணம் தான் நம்மில் பலருக்கு நினைவில் தோன்றும். புதினாவில் மணம் மட்டுமில்லாமல் பல்வேறு சத்துகளும் நிறைந்துள்ளது. இதில் ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ஸ் உள்ளன. மேலும் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் சி, டி, இ, ஏ ஆகிய எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காரணிகளும் உள்ளன. புதினாவை உணவில் சேர்த்து கொண்டால் செரிமான பிரச்சனை முதல் வாய் துர்நாற்றம் வரை குணமாக்க உதவும்.
பார்ஸ்லி : இந்த கீரை வகையில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் உள்ளதால் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். பார்ஸ்லி சாப்பிட்டு வந்தால் கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் இதில் வைட்டமின் கே உள்ளதால் எலும்புகளை உறுதிபடுத்த கூடியது. கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் நிறைந்துள்ளது.
வெந்தய கீரை : உடலுக்கு தேவையான பல சத்துக்கள் வெந்தய கீரையில் உள்ளது. இதில் குளுக்கோஸை கட்டுபடுத்த கூடிய அளவிற்கான கிளைசிமிக் அளவும் உள்ளது. கால்சியம் சத்து வெந்த கீரையில் நிறைந்துள்ளதால் எலும்புகள் பலவீனமாவதையும் தடுக்கும்.
லெட்யூஸ் கீரை : உடல் வீக்கத்தையும், இதய நோய்களையும் தடுக்க கூடிய தன்மை இந்த கீரை வகைக்கு உண்டு. இதில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலம் வலுப்பெறும், நல்ல தூக்கம் கிடைக்கும், செரிமான பிரச்சனையை குணப்படுத்தும்.
பசலை கீரை : பசலை கீரையில் ஏராளமான நன்மைகள் உள்ளன. செரிமான பிரச்சனை முதல் உடல் எடையை குறைப்பு வரை இந்த கீரை உதவுகிறது. மேலும் இதில் போலிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் அதிக அளவிலான நார்ச்சத்துகள் உள்ளன. பசலை கீரை சாப்பிடுவதால் கண் பார்வைக்கும் நல்லது. எலும்புகளை வலுவாக்க உதவும் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுகுள் வைக்கும்.
கருவேப்பிலை : பல்வேறு நன்மைகள் கருவேப்பிலையில் உள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு முழு நலனும் கிடைக்கும். சர்க்கரை நோய், கொலஸ்டிரால், வயிற்று புண் ஆகியவற்றை குணப்படுத்த கூடியது. எனவே உணவில் உள்ள கருவேப்பிலையை ஒதுக்கி வைக்காமல் சாப்பிட்டு வரவும்.
No comments:
Post a Comment