Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர் தேர்வில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700க்கும் மேற்பட்டோர் தேர்வாகியுள்ளது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் நில அளவை துறையில் பணியாற்றுவதற்காக ஆயிரம் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான தேர்வு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கலந்தாய்வு நடைபெற்று, தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதில் தேர்ச்சி பெற்றவர்களின் பெரும்பாலான பதிவெண்கள் ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது ஒருவருக்கு பின் ஒருவர் தேர்வாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் அங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது விசாரணை நடத்தி அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment