Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 22, 2023

8-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு - சென்னையில் மார்ச் 24-ம் தேதி மாபெரும் முகாம்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து எதிர்வரும் மார்ச் 24ம் தேதி (வெள்ளிக்கிழம்) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
இதில் 8ம் வகுப்புத் தேர்ச்சி முடித்தவர்களுக்கு கலந்து கொண்டு பணியில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து எதிர்வரும் மார்ச் 24ம் தேதி (வெள்ளிக்கிழம்) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம், கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு,ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களில் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும். வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov) பதிவேற்றம் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News