Join THAMIZHKADAL WhatsApp Groups
உயர் இரத்த சர்க்கரை அளவு கொண்ட நீரிழிவு நோயாளிகள் சில சர்க்கரை இல்லாத பானங்களை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கோடை காலம் நெருங்கி வருவதால், சர்க்கரை நோயாளிகள், இந்த பானங்களை உட்கொண்டால், உடலில் நீர்ச்சத்து குறையாது என்கின்றனர். அதனால் இந்த பதிவில் வெயிலை சமாளிக்கும் பானங்கள் குறித்து தெரிந்துக் கொளவோம்.
மோர் : வெயில் காலத்தில் பானமாகவோ, உணவு மூலமாகவோ கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டியது மோர் ஆகும். நம் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல் செரிமானக் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் மோர் அருந்துவது நல்ல பலனை தரும். புரதம் மற்றும் மாவுச்சத்து இணைந்த பானம் இது.மோரில் நல்ல பாக்டீரியா நிரம்பியிருக்கும்.கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் பலர் விரைவில் சோர்வடைந்து விடுகிறார்கள். வெயிலின் தாக்கத்தால் வியர்த்து கொட்டுகிறது. இதன் விளைவாக, உடல் வறட்சி மற்றும் தாகம் ஏற்படும். இந்த நேரத்தில் ஏதேனும் குளிர்பானங்களை குடிக்க சிலர் பயப்படுவார்கள். முக்கியமாக சுகர் உள்ளவர்காள் ஜூஸ் போன்ற பானங்கள் குடிக்கவே பயப்படுவார்கள். அதனால் அதிகமாக சர்க்கரை உள்ள பானங்களை விட சர்க்கரை இல்லாத பானங்களை உட்கொள்வது நல்லது.
தண்ணீர்: உடலுக்குத் தேவையானது தண்ணீர். எனவே, கோடை காலத்தில் தண்ணீர் தவறாமல் எடுக்க வேண்டும். முடிந்த அளவு தண்ணீர் குடிக்கவும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவும் நடுநிலையாக உள்ளது. சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் உடலில் இருந்து கூடுதல் குளுக்கோஸை சிறுநீர் வடிவில் வெளியேற்றுகிறது.
தேங்காய் தண்ணீர்: இயற்கையாகக் கிடைக்கும் பானங்களில் தேங்காய் நீரும் ஒன்று. இதில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. தேங்காய் நீரில் சில கலோரிகள் உள்ளன. பொட்டாசியம், அமினோ அமிலங்கள், நொதிகள், பி வைட்டமின்கள், மெக்னீசியம், இரும்பு மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. தேங்காய் நீரில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது. தேங்காய் நீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தேங்காய் நீர் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
எலுமிச்சை சாறு: கோடையில் எலுமிச்சை சாறு கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். சர்க்கரை இல்லாமல் சாப்பிடுவது நல்லது. எலுமிச்சை சாறு இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
லஸ்ஸி : இது உப்பு லஸ்ஸி என்றும் அழைக்கப்படுகிறது. தொடர்ந்து கிடைக்கும் பானங்களில் லஸ்ஸியும் ஒன்றாகும். இது வெறும் பானம் அல்ல. உடலுக்கு ஊக்கியாக செயல்படுகிறது. மூளையைத் தூண்டுகிறது. இந்த லஸ்ஸி செய்வது எளிது. தயிர், கருப்பு உப்பு, புதினா துளிர் மற்றும் சீரகத் தூள் ஆகியவற்றைக் கலந்து இந்த உப்பு லஸ்ஸியை நீங்கள் தயார் செய்யலாம்.
புதினா ஜூஸ்: இந்த புதினா ஜூஸ் கோடை வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள நல்லது. இதில் சர்க்கரைகள் எதுவும் இல்லை என்பது சிறப்பு. இதனால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. செரிமானம் மேம்படும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் இது ஒரு நல்ல பானம். புதினா இலைகள் சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து இந்த பானத்தை செய்யலாம்.
விளாம்பழம் ஜூஸ்: இதில் இருக்கும் இரும்புச்சத்து அதிகம்.மேலும் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இந்த பழம் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இது கணையத்தை இன்சுலின் உற்பத்தி செய்ய தூண்டுகிறது. செரிமான பிரச்னையை சரிச்செய்கிறது.
சத்து மாவு: இது உளுந்து மாவில் தயாரிக்கப்படும் பாரம்பரிய பானம். இது தண்ணீர், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, வறுத்த சீரக தூள் மற்றும் புதினா இலைகள் சேர்த்து செய்யலாம். இரத்தத்தில் உள்ள இரத்த அழுத்தத்தையும் சீராக்கும்.
No comments:
Post a Comment