Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப்-ல் 9,223 கான்ஸ்டபிள் (டெக்னிக்கல்/ட்ரேட்ஸ்மேன்) பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிக்கான விண்ணப்ப செயல்முறை மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: ஆண்/பெண் என இருபாலருக்கும் தனித் தனியாக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Constable (Technical/Tradesmen) Recruitment 2023: 9212 ( ஆண்கள் -9105, பெண்கள்-107); கான்ஸ்டபிள் (pioneer) : 11
கல்வித்தகுதி: இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அந்த தொழிற்பிரிவில் போதிய முன்னனுபவம் இருக்க வேண்டும். அதே சமயம், ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கனரக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். Mechanic Motor Vehicle பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01/08/2023 அன்று 21-27-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
இதையும் வாசிக்க:இந்து அறநிலையத் துறையின் கீழ் வேலை வேண்டுமா? வாங்க விண்ணப்பிக்கலாம்!
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். முன்னாள் ராணுவத்தினர் 3 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
சம்பளம்: சம்பள நிலை - 3 (ரூ. 21,700 முதல் ரூ.69,100 வரை)
விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பம் கட்டாயம் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை https://crpf.gov.in/index.htm இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
பணியிடங்களின் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து விவரங்களும், ஆட்சேர்க்கை அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்
தேர்வு முறை: கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை முறை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment