Sunday, March 26, 2023

நடுநிசியில் இந்த நேரங்களில் விழிப்பு வருகிறதா? அதற்கான காரணங்கள் இதோ


சிலருக்கு சொல்லி வைத்தார் போல் தினமும் நடுநிசியில் தூக்கத்தில் இருந்து விழிப்பு வரும். இந்த வெறுப்பூட்டும் தூக்கப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.நல்ல இரவு தூக்கம் நம் நல்வாழ்வுக்கு இன்றியமையாதது.

இன்று போதுமான அளவு தூங்குவது இளைஞர்கள், நடுத்தர வயதினரிடையே குறைகிறது. 10 மணியே நள்ளிரவாக தெரிந்த காலம் போய், இன்று 11 மணியே பலருக்கு முன்னிரவாக தெரிகிறது. சிலர் ஆழ்ந்த தூக்கத்தை விரும்புவர். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி தூக்கம் கெடும்.

இது ஒன்றும் அசாதாரணமான பிரச்னையில்லை. தி ஸ்லீப் டயட்டின் ஆசிரியரான டாக்டர் ஜோஸ் கோலன், இரவில் 4 - 6 முறை எழுந்திருப்பது பொதுவானது தான் என்கிறார். எந்த நேரத்தில் தூக்கம் பாதித்தால் என்ன பிரச்னை என்பதற்கான பட்டியல் இதோ...இரவு 9 மணி முதல் 11 மணி வரை எழுந்திருத்தல் பொதுவாக பெரும்பாலான மக்கள் தூங்கும் நேரம் இது. தூங்கிய சிறிது நேரத்திலேயே முழிப்பு நிகழும்.

இது போன்று உங்களுக்கு நிகழ்ந்தால், மன அழுத்தம், கவலை இருப்பதற்கான அறிகுறி. பென்சில்வேனியா பல்கலைக்கழக தூக்க மருத்துவத்திற்கான இயக்குனர், மைக்கேல் பெர்லிஸ், " இரவின் தொடக்கத்தில் நீங்கள் தூங்குவதற்கு சிரமப்பட்டால், அது வாழ்க்கையின் நடந்தவற்றால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகும்." என்கிறார்.இதற்கான தீர்வாக தியானம், யோகாவை முயற்சியுங்கள். படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போன், டிவி பார்ப்பதை தவிருங்கள். அதற்கு பதிலாக ஒரு புத்தகத்தைப் படிக்க முயற்சியுங்கள்.இரவு 11 மணி - அதிகாலை 1 மணிக்குள் எழுந்தால்...

உறங்கும் முன் செரிமானமடைய கடினமான அசைவ உணவுகள், கொழுப்பு, புரதம் நிறைந்த சைவ உணவுகள் எடுத்தால் இந்த சமயத்தில் தூக்கம் கெடும் என்கின்றனர் மருத்துவர்கள். பாரம்பரிய சீன மருத்துவ முறைப்படி உடல் 12 முக்கியமான ஆற்றல் பாதைகளைக் கொண்டுள்ளன. அவை வெவ்வேறு உறுப்புகளுடன் தொடர்புடையவை. இந்த 11 - 1 மணியில் இந்த ஆற்றல் பாதையில் ஒன்று பித்தப்பைக்காக பணியாற்றும்.

பகலில் நீங்கள் உட்கொண்ட அனைத்துக் கொழுப்புகளையும் உடைக்க பித்தப்பை செயல்படுவதால், இந்த நேரத்திற்கு முன் பெரிய உணவுகளை எடுக்கக் கூடாது. இதனால் அவை தடுமாறும். தூக்கம் கெடும். எனவே தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்னரே உணவை முடித்துக்கொள்ளுங்கள்.

பசி எடுத்தால் பழம் சாப்பிடுங்கள்.அதிகாலை 1 மணி முதல் 3 மணிக்குள் எழுந்திருத்தல் இது கல்லீரல் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் நேரம். கல்லீரலுக்கு வேலை அதிகமானால் இந்த நேரத்தில் முழிப்பு வரலாம். இரவு நேர மது அருந்துவதைக் குறைப்பது இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான முக்கிய வழி. அது தூக்க சுழற்சியை மோசமாக்கும்.

சிலர் தூக்கத்தை தூண்டுகிறதே என்பதற்காக ஒரு பெக் அருந்துவர். ஆனால் விளைவுகள் நீண்ட நேரம் நீடிக்காது. உடல் மதுவை உடைத்து அதை வளர்ச்சிதைமாற்ற செய்ததும், மூளை அலைகள் மீண்டும் தூண்டப்பட்டு விழிப்பை ஏற்படுத்திவிடும். எனவே இரவில் மதுவை தவிருங்கள்.அதிகாலை 3 முதல் 5 மணிக்குள் எழுந்திருத்தல்சீன உடல் கடிகாரத்தின் படி இந்த நேரம் என்பது ஆற்றல் பாதைகள் நுரையீரலுக்காக பணியாற்றும். அதனை வலுவாக்கி, புதிய காற்றை நிரப்பி, நாள் முழுக்க தேவையான ஆற்றலை செலுத்தும்.இந்த நேரத்தில் விழிப்பு வந்து இருமினால், நீங்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் அல்லது சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.தூங்குவதற்கு முன் கடினமான வேலைகள் எதுவும் பார்க்க வேண்டாம். பகல் பொழுதில் வெளிப்புற உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News