Join THAMIZHKADAL WhatsApp Groups
மாணவர்களை தயவு செய்து பள்ளிக்கு அனுப்பி வையுங்கள், படிக்கக் கூடிய வயதில் படிக்க வேண்டும், வேலைக்கு செல்லக்கூடிய வயதில் வேலைக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் 70 வருட வாழ்க்கை வரலாற்றை விளக்கும் விதமாக புகைப்பட கண்காட்சி மதுரை நத்தம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த புகைப்பட கண்காட்சியை இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், " தமிழ்நாடு முதலமைச்சரின் கண்காட்சியை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் பிரச்சனையை முன் நிறுத்தி போராட்டங்கள் நடத்தி சிறை சென்றார். நமது தமிழ்நாடு முதல்வர் அதை அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த புகை பட கண்காட்சி அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.
இந்த புகைப்பட கண்காட்சியை பார்க்கும்போது எனக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தில் தமிழக முதல்வருடன் 234 தொகுதிகளிலும் நான் பயணித்தேன். அந்த புகை படங்கள் என்னை கவர்ந்தது. குறிப்பாக எனது தந்தை மற்றும் நமது முதலமைச்சரோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் போது உள்ளத்திற்கு மிகுந்த நெழ்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் பள்ளிக்கு வருகை தராமல் இருப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் ஏன் வரவில்லை என்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களை தயவு செய்து பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். படிக்கக் கூடிய வயதில் படிக்க வேண்டும், வேலைக்கு செல்லக்கூடிய வயதில் வேலைக்கு செல்ல வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment