Join THAMIZHKADAL WhatsApp Groups
பாப்பி விதைகள் எனும் கசகசா நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது. மேலும் இரவில் பல முறை எழுந்திருக்கும் அசைவுகரியத்தையும் குறைக்கிறது. கசகசாவில் பொட்டாசியம், கால்சியம், தாமிரம், மெக்னீசியம், மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கசகசாவை பாலுடன் கலந்து தினமும் இரவு அருந்தி வந்தால் நன்கு தூக்கம் வரும்.
தூங்க செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு இந்த பாலை தினமும் குடிக்கவும். தூக்கத்திற்கு முன் சூடான பால் அருந்துவது குடலுக்கு நல்லது என்றும், செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பானம் மன அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஆழமான தூக்கத்தை தூண்டுகிறது. கசகசா பால் தயாரிக்கும் முறைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
தேவையான பொருட்கள் :
பால் - 1 கப்
பாப்பி விதைகள் - 2 டீஸ்பூன்
வெல்லம் தூள் - 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை :
முதலில் ஒரு ஸ்பூன் கசகசாவை எடுத்து வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இப்போது விதைகளை அரைத்து பாலுடன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
இதனை நடுத்தர தீயில் வைத்து 5-6 நிமிடங்கள் காய விடவும். நன்கு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து ஆற விடவும்.
இதனுடன் வெல்லம், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை மிதமான சூடாக இருக்கும்போது குடிக்கவும். இதனை தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல தூக்கம் வருவதை காண்பீர்கள்.
செய்முறை 2 :
முதலில் உலர்ந்த கசகசாவை ஒரு தவாவில் சில நிமிடங்கள் வறுக்கவும். பொன்னிறமாக வந்த பின்னர் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். நடுத்தர தீயில் வைத்து தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு கொதி நிலைக்கு வந்த பின்னர் அடுப்பை அணைத்து விட்டு ஒரு குவளையில் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு வெல்லம், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பாலை தூங்கும் முன்னர் அருந்துங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment