Tuesday, March 21, 2023

மாப்பிள்ளை சம்பா..தாம்பத்ய பிரச்சினை நீக்கும்..குழந்தை பேறு தரும் தரமான அரிசி..என்னென்ன சத்துக்கள்

இன்றைய இளம் தலைமுறையினர் துரித உணவுகள் சாப்பிட்டு விட்டு 40 வயதிலேயே பல வித நோய்களுக்கு ஆளாகின்றனர்.

பாரம்பரிய அரிசியில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் உடல் வலிமையடையும் சந்ததியும் பெருகும் என்கின்றனர். மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த உணவுகளை சாப்பிட்டால் தாம்பத்ய குறைபாடு நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.

இன்றைக்கு நம்முடைய வீடுகளில் பொன்னி, ராஜபோகம்..சீரக சம்பா,பாஸ்மதி என பலவித ரக அரிசிகளை சமைப்பதற்கு பயன்படுத்துகிறோம். நம்முடைய தாத்தா பாட்டி, அம்மா அப்பாக்கள் அவர்களுடைய காலத்தில் ஐஆர் 8, ஐஆர் 20 ரக நெல் அரிசிகளை சமைத்து சாப்பிட்டு இருக்கின்றனர். பல பாரம்பரிய அரிசி ரகங்களை பயன்படுத்தியதால்தான் 80 வயதிலும் தாத்தா, பாட்டிகள் உடல் வலிமையுடன் இருக்கின்றனர். மாப்பிள்ளை சம்பா அரிசி

மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா அரிசிகளைப் பற்றி இன்றைக்கு சட்டசபையில் பேசி கலகலப்பூட்டினார் வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம். நம்முடைய பாரம்பரிய நெல் ரகங்களே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்தது. பல ரகங்கள் மறைந்துவிட்டது. தற்போது 200 வகையான நெல் ரகங்களை மீட்டுள்ளனர்.

சீரக சம்பா , காட்டு பொன்னி, சின்ன பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா போன்றவற்றை ஆர்வத்துடன் பயன்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். மாப்பிள்ளை சம்பா பெயருக்கேற்றபடி மாப்பிள்ளைகளுக்கு புது மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் தேவை.

ஆண்பிள்ளைகளுக்கு ஏற்றது மாப்பிள்ளை சம்பா. உடலுக்கு அதிக அளவில் பலம் அளிக்கக்கூடிய மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் புது மாப்பிள்ளை போல இருக்கலாம். எனவேதான் அதிக அளவில் இளம் வயது ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட கொடுத்துள்ளனர். உடலுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தரும் மாப்பிள்ளை சம்பாவின் சிறப்பே ஆண்மையை பலப்படுத்தும் என்பது தான்.

மாப்பிள்ளை சம்பா அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் மிகுந்திருக்கின்றன. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்க கூடியது. மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து அதில் தண்ணீர் ஊற்றி மறுநாள் நீராகாரம் ஆக சாப்பிட்டாலும் அதுவும் சத்து நிறைந்தது. புது மாப்பிள்ளைக்கு இந்த நீராகாரத்தை தரலாம். உடலும் வலிமையும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். சாதாரண காய்ச்சல், தலைவலி போன்றவை வந்தால் கூட அதிகம் பாதிக்காமல் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். உடம்பில் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலிமையைத் தருகிறது.
அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது.

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. தாம்பத்ய குறைபாடுகளை போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம் வலுவடைகிறது.

ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்சனை சமீப காலமாக அதிகரித்துவருகிறது. அன்றாட உணவு பழக்கங்கள் மாற்றத்திலும் வாழ்க்கை முறையும் இதற்கு பெரும் காரணங்களாகிவிட்டது. உடலுக்கு பலம் தரக்கூடிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு. ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கிடைக்கும். ஒரு மாதத்தில் பலனும் தெரிய ஆரம்பிக்கும்.பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதம் ருசியாகவும் சத்தாகவும் இருக்கும். இதை சாதமாக மட்டும் சமைக்காமல் இட்லி, தோசை மாவு அரைக்கவும் பயன்படுத்தலாம். புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம். சாதம் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சேர்ந்து இளஞ்சூட்டில் குடித்துவந்தால் ருசி அபாரமாக இருக்கும். அதோடு வயிற்றுப்புண், வயிறுவலி.. வாய்ப்புண் குணமாகும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்பு சத்து, துத்தநாக சத்து உள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவும். நார்ச்சத்து கொண்ட இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வயிறு, வயிற்றுப்புண் தொடர்பான நோய்கள் குணமடையும். குழந்தைகளுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியில் கஞ்சி, புட்டு, கொழுக்கட்டை செய்து தர எலும்புகள் வலிமையடையும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News