Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசு பணியாளா் தேர்வு ஆணையம் நடத்தும் 2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை https://ssc.nic.in/ என்ற அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று முறைகளில் நடைபெற உள்ள இத்தேர்வில் வெற்றி பெற்றவா்களுக்கு தொடக்க கால மாத ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கான பயிற்சியை தாட்கோ நிறுவனம், 'வராண்டா ரேஸ்' என்ற தனியாா் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவமாக வழங்குகிறது. 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் பயிற்சியில் சேர https://www.verandalearning.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் உள்ள தாட்கோ அலுவலகம் அல்லது 044-25246344 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment