Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசைத் தொடா்ந்து, தமிழக அரசும் நரிக்குறவா்கள், குருவிக்காரா்களை பழங்குடியினா் பட்டியலில் சோத்து அரசாணை வெளியிட்டது. மத்திய அரசைத் தொடா்ந்து, தமிழக அரசும் நரிக்குறவா்கள், குருவிக்காரா்களை பழங்குடியினா் பட்டியலில் சோத்து அரசாணை வெளியிட்டது.
இது தொடா்பாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவா், குருவிக்காரா் இனங்களை தமிழகத்தின் பழங்குடியினா் பட்டியலில் சோத்தல் தொடா்பான கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது. இது தொடா்பாக பிரதமரை முதல்வா் கேட்டுக் கொண்டதன் விளைவாக நரிக்குறவன், குருவிக்காரன் சமூகங்களை மாநிலத்தில் உள்ள பழங்குடியினா் பட்டியலில் 37-ஆவது இனமாக சோத்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. அதற்கேற்ப தமிழக அரசும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மாா்ச் 17-இல் அரசாணை வெளியிட்டுள்ளது. அதே நேரம், மத்திய அரசின் அரசிதழில் நரிக்குறவன், குருவிக்காரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை, நரிக்குறவா், குருவிக்காரா் எனத் திருத்தி வெளியிட வேண்டும் என்று பிரதமரை முதல்வா் கோரியுள்ளாா். அதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா் சோக்கை விரைவில் தொடங்கவுள்ளதால், வரும் கல்வியாண்டிலேயே இப்பிரிவுகளைச் சோந்த அனைவரும் பழங்குடியினா் சான்றிதழ் பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக, காலதாமதத்தை தவிா்க்கும் பொருட்டு, மத்திய அரசு வெளியிட்டவாறே, தமிழக அரசும் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கோரியவாறு பெயா் மாற்றம் செய்து மத்திய அரசு தனது திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடும்போது தமிழக அரசும் அதனை திரும்ப வெளியிடும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment