Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 24, 2023

தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் முடி உதிர்தல், முடி அடர்த்தி குறைதலை கட்டுப்படுத்தலாம்!பெண்களே தெரிஞ்சிக்கோங்க.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தேங்காய் சட்னி அரைக்கும்போதோ, அல்லது பாலெடுக்கும்போது தேங்காயைத் துருவுவதற்கு முன்னர், அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு மென்று பார்க்காதவர்கள் மிகவும் குறைவு.

அது மிகுந்த சுவையாக இருப்பதோடு மட்டுமில்லாமல் அதிக சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இனி தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது எனப் பார்ப்போம்.

* தேங்காயில் உள்ள புரதம் முடி உதிர்தல் மற்றும் முடி அடர்த்தி குறைதலை கட்டுப்படுத்துகிறது.

* தேங்காயில் இருக்கும் நார்ச்சத்தானது, உணவுகளை எளிதாக செரிமானம் அடைய உதவுகிறது.

* குடல் பிரச்சினைகளை தீர்க்கிறது.

* தேங்காயில் உள்ள செலினியம் மற்றும் புரதம் கூந்தல் அழகை அதிகரிக்கும்.

* தேங்காயில் உள்ள நீர்ச்சத்தானது, சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து வலிப்பு நோய் உள்ளவர்களின் வலிப்புத் தன்மையை குறைக்கவும் பயன்படுகிறது.

* இரத்தத்தை சுத்திகரிக்கின்றது.

* சிறுநீரகத் தொற்று இருப்பவர்கள் வெறும் வயிற்றில் தேங்காயை உண்ணுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

* தேங்காயில் இருக்கும் நார்ச்சத்தானது மலச்சிக்கலை குணமாக்குகிறது.

* உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வல்லமை உள்ளது. இதயத்துக்கு நன்மை பயக்கும்.

* சிலருக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும் வேளையில் தேங்காயை பச்சையாக உண்ணும்போது உடல் சூடு கட்டுக்குள் இருக்கும்.

* அல்சைமர் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

* உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News