Join THAMIZHKADAL WhatsApp Groups
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள், தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க உள்ளதாக, அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழி விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெறும் எனவும், பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, பயிற்சியில் சேர விரும்புவோர் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக இன்று முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment