Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 19, 2023

காலை உணவுக்கு ராகி அடை... இப்படி ஈசியா செய்து சாப்பிட்டால் உடலுக்கும் ஆரோக்கியம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ராகி அடை காலை உணவுக்கு பொருத்தமாக இருக்கும். இதில் நார்ச்சத்து , இரும்புச் சத்து இருப்பதால் நிறைவான ஊட்டச்சத்தை பெற சிறந்த உணவு.
அதோடு நாள் முழுவதும் எனர்ஜியுடன் வேலை செய்யவும் உதவும். அனைத்தையும் இரவே தயார் செய்து வைத்துக்கொண்டால் காலை எழுந்து மாவை பிசைந்து சுட்டு எடுப்பது மட்டும்தான் வேலை. இதனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலை உணவு ஈசியாக முடிந்துவிடும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ராகி மாவு - 2 கப்

முருங்கைக்கீரை - கைப்பிடி அளவு ( தேவைப்பட்டால்)

கருவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - 1/4 கப்

உப்பு - தேவைக்கு ஏற்ப

எண்ணெய் - வாட்டி எடுப்பதற்கு ஏற்ப

தண்ணீர் - மாவு பிசைந்து கொள்வதற்கு ஏற்ப


செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாய். கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.

ராகி மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதில் நறுக்கிய பொருட்களை போட்டு நன்குக் கிளறிக் கொள்ளவும்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக நீர் ஊற்றி கெட்டியான பதத்திற்குப் பிசைந்து எடுத்துக் கொள்ளவும். மாவை, சப்பாத்திக்கு பிசைவதைக் காட்டிலும் கொஞ்சம் தளர்ந்தவாறு பிசைந்து கொள்ளவும். தற்போது பிசைந்த மாவை 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அடுத்ததாக தோசைக் கல்லை அடுப்பில் நன்குக் காய வைத்து எண்ணெய் ஊற்றவும்.

எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்துக்கொள்ளவும். அதை வாழை இலையில் வைத்து தோசை போல் தட்ட வேண்டும். தட்டும்போது வெங்காயத் துண்டுகளை நன்கு அழுத்தியவாறு தட்டுங்கள்.

அடுப்பை சிறு தீயில் வைத்து அந்த தட்டையை தோசைக் கல்லில் போட்டு, இரண்டு புறமும் திருப்பி எடுக்கவும். வெந்துவிட்டதா என உறுதி செய்த பின் எடுத்துவிடவும். தற்போது ருசியான அடை ரெடி.

இதற்கு எந்தவித சைட் டிஷ்ஷும் தேவையில்லை. அப்படியே சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் கார சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

குறிப்பு : இந்த அடையை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்ற முருங்க இலை, காரட், குடை மிளகாய் போன்றவற்றை பொடிசாக நறுக்கி போடலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News