Join THAMIZHKADAL WhatsApp Groups
துறையூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு, பாராட்டு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
திருச்சி மாவட்டம், துறையூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி லயஸ்ரீ, முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதில், 'இரவு சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன.
'இவற்றை தவிர்க்க, கால்நடைகளுக்கு, இரவில் பிரதிபலிக்கும் தோடு அல்லது வில்லைகள் வழங்க வேண்டும். என் கோரிக்கை பயனுள்ளதாக இருந்தால், வாழ்த்து மடல் அனுப்ப வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
சமூக அக்கறையுடன் ஆலோசனை வழங்கிய மாணவிக்கு, முதல்வர் வாழ்த்து தெரிவித்து, கடிதம் அனுப்பி உள்ளார்.
'யுனிசெப்' அமைப்புக்கு கொரோனா நிதி வழங்கியது, அகில இந்திய வானொலியில் உரையாற்றியது, அகர வரிசைப்படி தமிழ், ஆங்கில பழமொழிகளை தொகுத்து நுால் வெளியிட்டது போன்ற, மாணவி லயஸ்ரீயின் செயல்பாடுகளை, முதல்வர் பாராட்டினார்.
கல்வியில் சிறந்து விளங்கவும், புதிய சாதனைகள் படைக்கவும், முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment