Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 11 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு 15 ஆம் தேதி தொடங்கி இன்று வரை நொய்யல் வீதி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் திருப்பூர் மாவட்டத்தில் 75 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதில் மாவட்டத்திற்குள்ளாக 20 ஆசிரியர்களும், மாவட்டம் விட்டு மாவட்டம் 9 ஆசிரிய்களும் பணிமாறுதல் பெற்றனர்.
இந்த பணியிட மாறுதலை சிறப்பாக நடத்திக் கொடுத்த மதிப்பிற்குரிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும்,ஒருங்கிணைந்த கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும், மாவட்ட ஒருங்கிணைப் பாளர்களுக்கும், எமிஸ் ஒருங்கிணைப்பாளருக்கும் திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த மே மாதம் தமிழக அரசு எங்களுக்கு கொடுத்த மூன்று வாக்குறுதிகளில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியும்,பணியிட மாறுதலையும் அமல்படுத்தி உள்ளது.தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த பணிநிரந்தரம் என்பது தாமதமாகும் பட்சத்தில் இடைக்காலத் தீர்வாக மூன்றாவது வாக்குறுதியான அனைத்து வேலை நாட்களும் முழுநேர பணி வழங்கி,ஊதிய உயர்வு வழங்கி,தொகுப்பூதியத்திற்கு மாற்றும் அறிவிப்பை நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கையில் வெளியிடும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் மனசு திட்டத்திற்கு ஆசிரியர்கள் மின்னஞ்சல் அனுப்பினோம்.அதனடிப்படையில் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சிகரம் சதீஷ் அவர்கள் எங்களை அழைத்து எங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்ததோடு இரண்டு முறை மாண்புமிகு கல்வி அமைச்சரிடம் நேரில் அழைத்து சென்று எங்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.அமைச்சரும் எங்களது கோரிக்கைகளை உடனே மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.எனவே இந்த பட்ஜெட்டில் எங்களுக்கான நல்லதொரு அறிவிப்பு வரும் என 12,000 க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருக்கிறோம்.
பழ.கௌதமன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு
No comments:
Post a Comment