Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 5, 2023

வெந்நீரில் பூண்டை சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயை அடிச்சி விரட்டலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

வெந்நீர் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் செய்கிறது .அதிக எண்ணெய் பலகாரம் சாப்பிட்டால் சிலருக்கு நெஞ்செரிச்சல் உண்டாகும் .அப்போது வெந்நீர் குடித்தால் சரியாகும் .இன்னும் சிலருக்கு மூக்கடைப்பை குணமாக்க வெந்நீரில் முகத்தை காண்பித்தல் நலம் .மேலும் காலையில் வெண்ணீர் குடித்தால் மலசிக்கல் சரியாகும் .மேலும் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க வெந்நீர் பயன்படும் ,அது போல் பூண்டு பச்சையாக சாப்பிட்டாலும் ,வறுத்து சாப்பிட்டாலும் நமக்கு நல்ல பலன் தரும் .

1.சிலருக்கு இதய தமனிகளில் கொழுப்பு சேர்ந்திருக்கும் .அவர்கள் தொடர்ந்து சூடான நீரை குடித்து வந்தால், இதய தமனிகளில் கொழுப்பு சேருவதையும் தடுக்க முடியும்.

2.வெந்நீர் இரத்த திரவத்தை வெகு விரைவாக அதிகரிக்கச் செய்கிறது. வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதால், இரத்தம் உறைவது தடுக்கப்பட்டு ,ரத்தம் மெலிந்து இரத்த ஓட்டம் மேம்படுகிறது.

3.எண்ணெய் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள்மூலம் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து ஆரோக்கியம் கெடுகிறது .

4.மேலும் , உடலில் ட்ரைகிளிசரைடு அதிகரிக்கிறது. வெந்நீரை குடிப்பதனால், ட்ரைகிளிசரைடு துகள்கள் நரம்புகளில் சேர்வது தடுக்கப்பட்டு ஆரோக்கியம் சிறக்கிறது

5.இந்த பாதிப்பு வராமல் தடுக்க வெந்நீரில் பூண்டை சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ராலின் அளவு குறைவதோடு, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலும் குறைந்து நம் இதயம் பாதுகாக்கபடுகிறது .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News