Join THAMIZHKADAL WhatsApp Groups
நவீன உலகில் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறும் நிலை மாறி நமது செல்போன்களிலேயே மருத்துவர்களின் ஆலோசனைகளை வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்கிறோம்.
அதுவும் சமூக வலைத்தளங்களில் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை சொல்வதற்கென்றே பல யூ-டியூப் சேனல்கள் வந்துவிட்டன. இந்த நிலையில் எலுமிச்சை, தண்ணீர் மற்றும் உப்பு கலந்த பானம் ஒருவரது உடலுக்கு எவ்வளவு நன்மைகளை செய்கிறது, பானத்தை அருந்துவதால் ஒருவருக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் போன்ற விளக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலின் நீர்சத்து குறைபாட்டினை சமன் செய்கிறது : பெரும்பாலான மக்கள் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போது அவர்களின் உடல் நீர்சத்து டீஹைட்ரேட் ஆகிவிடுகிறது. அதனால் காலையில் எழுந்ததும் தண்ணீர், உப்பு மற்றும் எலுமிச்சை கலந்த புத்துணர்ச்சி தரும் பானத்துடன் உங்களது நாளை தொடங்குவது சிறப்பானதாக இருக்கும். இந்த பானத்தை நீங்கள் குடிக்கும்போது உங்கள் உடல் ஹைட்ரேட்டாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனைத் தரக்கூடியது : இந்த பானம் இரத்த சர்க்கரை உப்பில் இருந்து கிடைக்கப்படும் முறையான மினரல் சத்துக்களை உறிஞ்சி இன்சுலின் அளவை சீராக்குகிறது. அதனால் இரத்த சர்க்கரை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனைத் தரக்கூடியது. இது போன்ற பல நன்மைகளை கொண்டதாக எலுமிச்சை விளங்குகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது : இந்த பானம் அருந்துவதால் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இதய துடிப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது. எலுமிச்சை ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் மூலமாகும், இதனை நீங்கள் பருகும்போது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படுகிறது.
செரிமான மண்டலம் மற்றும் இதயத்தை மேம்படுத்துகிறது : எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் பானம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாகுவதை தூண்டுகிறது, இதனால் உணவு நன்கு செரிமானம் அடைகிறது. இந்த பானம் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதால் கீல்வாதம், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் மற்றும் பல்வேறு வகையான மூட்டுவலிகள் வராமல் தடுக்கப்படுகிறது. எலுமிச்சை மற்றும் உப்பு இரண்டும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உப்பில் உள்ள சோடியம் குளோரைடை சமன் செய்கிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின்-சி உடலில் குளுடோதயான் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
சிறுநீரக கற்களை கரைக்கும் : கீல்வாதம், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் மற்றும் பல்வேறு வகையான மூட்டுவலி ஆகியவை உடலில் யூரிக் அமிலம் குவிவதால் அதிகரிக்கலாம். இந்த பானம் நீரிழப்பு தவிர்க்க செயல்படுவது மட்டும் அல்லாமல், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது, மேலும் தற்போது சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை உடைத்து வெளிக்கொண்டுவரவும் இந்த பானம் பயனுள்ளதாக இருக்கலாம்.
கல்லீரல் நச்சு நீக்கம் : கல்லீரலை நச்சுத்தன்மையாக்க உதவும் குளுட்டோதையோன் உற்பத்திக்கு வைட்டமின் சி தேவைப்படுகிறது. இது கல்லீரல் செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளது. மேலும் உங்கள் உடலின் உணர்திறன் pH சமநிலையைக் கட்டுப்படுத்த இந்த பானம் உதவுகிறது.
தயாரித்து பருகும் முறை : சிறிது எலுமிச்சையை பிழிந்து, ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இந்த பானத்தை தயாரிக்க வேண்டும். இந்த பானத்தை குளிர்ந்த நீர் அல்லாமல் சாதாரண நீரை பயன்படுத்தி தயாரிப்பது நல்லது.
No comments:
Post a Comment