Join THAMIZHKADAL WhatsApp Groups
குதிகால் வலி பாத வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
அதிக உடல் எடை, கால்சியம் குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு போன்றவை. இந்த குறைபாடுகளை போக்குவதற்கு மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் அதன் பக்க விளைவாக குதிகால் வலி வரலாம்.
குதிகால் வலி பாத வலி எரிச்சல் நொடியில் காணாமல் போகும் ஒரு எளிய இயற்கை வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.
ஒரு அகலமான டப்பில் நன்கு சுட வைத்த சுடுநீர் ஊற்றவும். ஒரு பாகற்காயை வட்டமாக நறுக்கவும். நறுக்கிய பாகற்காயை டப்பில் உள்ள சுடு தண்ணீரில் போடவும். அடுத்து ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போடவும். தண்ணீர் ஆறிவிடக்கூடாது. அப்படியே ஒரு ஐந்து நிமிடம் விடவும்.
பாகற்காயில் உள்ள கசப்பு அதில் முழுவதும் இறங்க வேண்டும். பின்னர் நமது கால் பொறுக்கிற அளவு சூடு வந்ததும் இரண்டு பாதங்களையும் சுடுதண்ணீரில் வைக்கவும். முதலில் லேசாக சுடுவது போல் இருக்கும் பிறகு சரியாகிவிடும்.
அப்படியே ஒரு பத்து நிமிடம் நீரின் சூடு ஆறும் வரை கால்களை வைத்திருக்கவும். பிறகு கால்களை வெளியே எடுத்து துடைத்துவிட்டு 2 சொட்டு அளவு தேங்காய் எண்ணெயை பாதங்களில் தேய்க்கவும். பின்னர் உறங்கச் செல்லலாம்.
இதை 2 அல்லது 3 மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வர கால்களில் உள்ள வலி உடனடியாக குறைவதை காணலாம். பாகற்காயில் உள்ள கசப்புத் தன்மை பாதங்களில் உள்ள டாக்ஸின்களை நீக்கிவிடும். இதனால் பாதங்களில் உள்ள எரிச்சல் தேவையற்ற வாத நீர் உப்பு நீர் ஆகியவை நீங்கிவிடும். இதனால் குதிகால் வலி எரிச்சல் குறையும்.
No comments:
Post a Comment