Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புன்னகை திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை நந்தனம் அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல் பாதுகாப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புன்னகை திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், புன்னகை திட்டத்தின் மூலம் 4 லட்சம் மாணவர்களுக்கு வாயில் ஏற்பாடும் பொதுவான நோய்கள் குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குழந்தைகள் பல் துளக்குவது முதல் பற்களை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும், குழந்தைகளுக்கு தேவையான பல் சிகிச்சைகளும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார். முன்பு எல்லாம், பள்ளிப் பருவத்தில் மை தெளித்து விளையாடியதுபோல், இப்போது மாணவர்கள் மேஜைகளை உடைத்து விளையாடுவதாகவும், அவர்களது வருங்காலம் பாதிக்கப்படாமல் இருக்க எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment