ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை ஐந்தே நிமிடத்தில் மூட்டு வலி நிவர்த்தியாகும்!!
இந்த காலகட்டத்தில் 30 வயதை கடந்து விட்டாலே போதும் அனைவருக்கும் மூட்டு வலி முழங்கால் வலி என வந்து விடுகிறது குறிப்பாக மாடிப்படி கூட ஏற முடியாத அளவிற்கு பலரும் சிரமப்படும் நிலை உண்டாகிறது.
இது அனைத்திற்கும் மாறுபட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணம் என்றாலும் தற்பொழுது மீண்டும் மக்கள் முந்தைய உணவு முறைக்கு செல்கின்றனர். அரிசி என தொடங்கி நம் குடிக்கும் தண்ணீர் வரை தற்பொழுது கலப்படம் இல்லாமல் இருப்பதில்லை.
அந்த வகையில் நாம் உண்ணும் உணவு நமது உடலுக்கு ஆரோக்கியமான மருந்தாக இல்லாமல் கலப்படமான பொருளாக தான் உள்ளது. இதனை எல்லாம் தடுக்கும் வகையில் நமது சுற்றுச்சூழலை சூழ்ந்திருக்கும் மூலிகைகளைக் கொண்டே நமது உடல் நிலையை சீர்படுத்திக் கொள்ளலாம்.
அந்த வகையில் எலும்பு என தொடங்கி இரத்த சோகை வரை அனைத்திற்கும் பெரும் மூலிகையாக விளங்குவது முருங்கைக்கீரை தான். அதனை வைத்து ஒரு கசாயம் வைத்து குடித்தாலே போதும் உடம்பில் பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.
தேவையான பொருட்கள்:
முருங்கை இலை ஒரு கைப்பிடி
ஓமம் அரை ஸ்பூன்
பட்டை சிறு துண்டு
மஞ்சள்
தண்ணீர் ஒரு கிளாஸ்
செய்முறை:
பட்டையானது நமது இதயத்தில் உள்ள அடைப்பை நீக்க உதவுவதோடு கொலஸ்ட்ராலையும் குறைக்கும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்த வேண்டும். பின்பு அதில் அரை ஸ்பூன் ஓமம் சேர்க்க வேண்டும். அதனுடன் எடுத்து வைத்துள்ள பட்டையை சற்று இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தோடு ஒரு கைப்பிடி முருங்கை கீரையையும் இடித்து அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விட வேண்டும். ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் நன்றாக சுண்டியதும் இந்த காசாயம் குடிப்பதற்கு தயாராகிவிடும்.
உங்கள் சுவைக்கேற்ப சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இதனை வாரத்தில் ஒரு முறை எடுத்துக் கொண்டாலே நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் மூட்டு முழங்கால் வலி என அனைத்தும் குணமாகும்.
No comments:
Post a Comment