Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 10, 2023

தேங்காய் எண்ணெயுடன் லெமன் சாறை கலந்து தலையில் தேய்ச்சா எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பலர் தலை முடி ஆரோக்கியத்துக்காக விதம்விதமான ஷாம்ப்பூக்கள் ,மற்றும் எண்ணெய்களை வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர் .இந்த பொருட்கள் எல்லாம் முடியின் வெளிப்புற வளர்ச்சிக்குத்தான் உதவுமே தவிர ,ஊட்டச்சத்துக்களைமுடிக்கு கொடுக்காது .இதற்கு நாம் நிறைய சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் .உதாரணமாக முட்டை அதிகம் எடுத்துக்கொள்ள அது முடி ஆரோக்கியத்துக்கு நன்மை சேர்க்கும் ,அதுபோல நிறைய நட்ஸ் வகைகள் சேர்த்து கொள்ளலாம் ,இதுவும் முடிக்கு நல்ல வலுவை கொடுக்கும் .மேலும் பீன்ஸில் உள்ள சில விட்டமின்கள் முடி ஆரோக்கியத்துக்கு நன்மை சேர்க்கும் .அது போல ஓட்ஸில் உள்ள சில ஊட்ட சத்துக்கள் முடிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் ,மேலும் முடியில் பொடுகு மற்றும் சில ஆரோக்கிய பிரச்சினைக்கு தீர்வுகளை கொடுத்துள்ளோம்


1.2 தேக்கரண்டி சூடான தேங்காய் எண்ணெயுடன் எடுத்து கொள்ளவும் .அதனுடன் சம அளவு எலுமிச்சை சாற்றை கலக்கவும். பின்னர் தலையில் மெதுவாக மசாஜ் செய்த பிறகு ஷாம்பு போட்டு முடியை அலசி வர பொடுகு தொல்லை தீரும்

2.50 மில்லி பாதாம் எண்ணெஎடுத்து கொள்ளவும் .பின்னர் இரண்டு துளிகள் தேயிலை மர எண்ணெயைக் அதனுடன் கலந்து கொள்ளவும் .பின்னர் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பூ போட்டு முடியை அலசி வந்தால் நல்ல முடி ஆரோக்கியம் பெரும் .

3.அடுத்து 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை 10-15 புதிய வேப்ப இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியிலும் தடவி விடவும். இப்போது பொடுகு எதிர்ப்பு ஷாம்பு கொண்டு கழுவினால் முடிக்கு ஆரோக்கியம் கிடைக்கும்

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top