Join THAMIZHKADAL WhatsApp Groups
முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் நம் உடலுக்கு நண்மை செய்வதால் பலர் அதை தினம் தங்களின் உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து கொள்கின்றனர் .குறிப்பாக முருங்கை கீரை கூட்டு ,முருங்கை காய் சாம்பார் ,முருங்கை பூ துவையல் என்று பல வகையில் சமைத்து சாப்பிடலாம் .இந்த கீரையை பொடியாக செய்து கர்ப்பிணி பெண்கள் தினம் சாப்பிட்டால் சுக பிரசவம் ஆகும் .மேலும் தலை முடி அடர்த்தியாக வளர இந்த முருங்கை பயன்படுகிறது ,மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சினை உள்ளோருக்கும் இந்த முருங்கை பயன் படும் .மேலும் இதன் பயன்களை பார்க்கலாம்
1.முருங்கை கீரையில் அதிகமான இரும்புச்சத்து, கால்சியம், காப்பர், ஜிங்க்,பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் 'ஏ', பீட்டா கரோட்டீன், வைட்டமின் 'சி', வைட்டமின் 'பீ' காம்பளக்ஸ், போன்ற ஊட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன .
2.மேலும் முருங்கைக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையை நீக்கும் தன்மை கொண்டது. எனவே இதை உணவில் சேர்த்தல் குழந்தை பிறப்பு நிச்சயம் உண்டு
3.சிலருக்கு தீராத மலசிக்கல் இருக்கும் ,அந்த மலச்சிக்கலை தீர்க்கவும் துணை புரிகிறது.
4., சிலருக்கு ரத்த சோகை இருக்கும் ,அதனால் ரத்த வெள்ளை அணுக்களின் எண்னிக்கையை அதிகரித்து ரத்த சோகையை வராமல் தடுக்கிறது.
5.குழந்தை பிறந்து பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.
6.இன்னும் பல மருத்துவ பயன்களை வாரி வழங்கும் முருங்கை கீரை வைத்து சத்தான பொடியை செய்து சாப்பிட்டு பலன் பெறலாம்
No comments:
Post a Comment