Friday, March 24, 2023

இருசக்கர வாகனம் வைத்திருக்கிறீர்களா?- ஆறு ஆவணங்கள் கட்டாயம்..

இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர்.இப்படி இருசக்கர வாகனம் வைத்திருக்கும் அனைவரும், சாலையில் வாகனத்தை இயக்கும் போது எந்தெந்த ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பலருக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், போக்குவரத்து போலீசாரிடம் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதைத் தடுக்க பின்வரும் ஆறு ஆவணங்களை கட்டாயம் வைத்திருப்பது அவசியமாகும்.

1. ஓட்டுநர் உரிமம்

2. ஆர்சி புக்

3. இன்சூரன்ஸ்

4. வாகன புகை சான்றிதழ்

5. எப்சி

6. மருத்துவ சான்று

இந்த ஆறு ஆவணங்களில், வாகனபுகை சான்று இருசக்கர வாகனம் வாங்கி ஒரு வருடம் வரை வைத்திருக்கத் தேவையில்லை. ஆனால் இரண்டாவது ஆண்டிலிருந்து கட்டாயம் வாகன புகை சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

எப்.சி சான்றிதழ் இருசக்கர வாகனம் வாங்கிய 15 ஆண்டுகளுக்கு இந்த சான்றிதழ் அவசியம் இல்லை என்றாலும், அதன் பிறகு கட்டாயம் எப்.சி சான்றிதழ் எடுக்க வேண்டும்.

குறிப்பாக, வாகனம் ஓட்டுபவர் 50 வயதுக்கு மேல் இருந்தால் மருத்துவ சான்று வைத்திருப்பது அவசியமாகும். இந்த சான்றுகளை வாகனம் இயக்கும் போது வைத்திருந்தால், தேவையற்ற அபராதங்களைத் தடுத்து இருசக்கர வாகனத்தைப் பாதுகாப்பாக இயக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News