Join THAMIZHKADAL WhatsApp Groups
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது முட்டை தான்.பலருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே கூறலாம்.அதிலும் முட்டையை அவித்து சாப்பிடுவது மிகவும் ருசியாக இருக்கும்.இப்படி முட்டையை தினமும் அவித்து சாப்பிடுவது நம்முடைய உடலுக்கு நல்லதா?
தினமும் முட்டையை அவித்து சாப்பிடலாமா என்பதை பற்றி பார்ப்போம்.
முட்டையில் கால்சியம் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது.
இது உங்களை நீண்ட நேரம் அதிக சக்தியோடு செயல்பட வைக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மாகுலர் சிதைவு, கண்புரை, மிக வேகமாக வயதாகும் நிலை ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவில் 186 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இயற்கையாகவே அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் தினமும் அவித்த முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உடல்நிலை பாதிப்புகள் இல்லாமல் இருப்பவர்கள் தினமும் ஒரு அவித்த முட்டையை சாப்பிடுவது நல்லது. வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அவித்த முட்டை கொடுக்கலாம். இது அவர்களின் செல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
அவித்த முட்டை வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கிறது. இதில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால் இது நம்முடைய வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. முட்டை புரதங்களின் ஆற்றல் மையமாக இருக்கிறது. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் துத்தநாகம், செலினியம் உள்ளது. இந்த இரண்டு தாதுக்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் முக்கியமான தாதுக்கள்.
முட்டையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கின்றன. முட்டையில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகிய இரண்டு அத்தியாவசிய ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உங்களுடைய கண்களை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
மேலும் கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கிறது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற ஊதாக் கதிர்களால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து உங்களுடைய கண்களை பாதுகாக்கிறது. மேலும் சிறு வயதிலேயே கண்புரை வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது முட்டை. முட்டையில் மூளையைப் பாதுகாக்க கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இது உங்களுடைய மூளையின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
No comments:
Post a Comment