எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு' ஏற்ப, மூன்றாம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களில், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, பாடத்திட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கவும், வயதுக்கு ஏற்ப குறைந்தபட்ச கற்றல் அடைவுகளை பெறவும், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டம், நடப்பு கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டது.
இதில், வழக்கமான பாடப்புத்தகங்களை கொண்டு, மாணவர்களுக்கு வகுப்புகள் கையாளப் படவில்லை.
எண்ணும் எழுத்தும் கையேடு பயன்படுத்தி, எண்கள், எழுத்துகளை அடையாளம் காணுதல், வாசித்தல், எழுத்து பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.
இதில், மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டது.
பாடத்திட்ட குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட பாடப்புத்தக கருத்துகளுடன், இத்திட்ட கருத்துகளும் இணைத்து, சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
'அடுத்த கல்வியாண்டில் இருந்து, ஒன்றாம் வகுப்பு முதல் பாடப்புத்தகங்கள் அடிப்படையில் வகுப்புகள் கையாளப்படும்' என்றார்.
No comments:
Post a Comment