பொதுவாகவே வாக்கிங் போவது உடலுக்கு நன்மை செய்யும் .சிலர் அதிகாலையில் வாக்கிங் போவார்கள் .இன்னும் சிலர் மாலை வேளையில் வாக்கிங் போவார்கள் .இன்னும் சிலர் சாப்பிட்டு முடித்ததும் இரவில் வாக்கிங் போவார்கள் .இப்படி இரவு உணவு முடித்து ஒரு அரை மணி நேரம் கழித்து வாக்கிங் போவது உடலுக்கு நிறைய நன்மைகளை செய்யும் .மேலும் மதிய உணவுக்கு அரை மணி நேரம் கழித்தும் வாக்கிங் போனால் சீக்கிரம் செரிமானம் ஆகும் .இப்படி உணவுக்கு பின் வாக்கிங் போவதால் வாயு தொல்லை ,அமில தொல்லை ,மலசிக்கல் தொல்லை போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம் .மேலும் சுகர் பேஷண்டுகளுக்கும் இது அதிக நன்மை பயக்கும் .இதனால் ரத்த க்ளுகோஸ் அளவு உயராமல் பாதுகாக்கப்படலாம் .மேலும் இதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
1.உணவுக்கு பின் நடப்பதால் மன அழுத்தம், பதற்றம், மனசோர்வு ஆகியவற்றிலிருந்து விடுபட்டு மன ஆரோக்கியம் மேம்பட இந்த இரவு நடை பயிற்சி உதவுகிறது.
2.இரவு நேர நடை பயிற்சியால் மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய கார்டிசோல், அட்ரினலின் ஆகியவற்றின் சுரப்பை குறைந்து விடுகிறது .
3.சிலருக்கு எக்சர்சைஸ் செய்யும் பழக்கம் இருக்காது .அப்படி பட்டோர் , சாப்பிட்ட பிறகு நடப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்
4.. இப்படி உணவுக்கு பின்னரோ அல்லது காலையிலோ ஒரு நாளுக்கு 60 நிமிடங்கள் அல்லது 10,000 காலடிகள் நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்
No comments:
Post a Comment