Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
பல்கலைகள், தொலைநிலை கல்வியில் பட்டப் படிப்புகள் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற, வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, யு.ஜி.சி., அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ள அறிவிப்பு:
அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களும், திறந்த மற்றும் தொலைநிலை கல்வியிலும், 'ஆன்லைன்' வழியிலும், பட்டப் படிப்புகளை நடத்த, யு.ஜி.சி.,யில் முறையான அங்கீகாரம் பெற வேண்டும்.
வரும் 2023- - 24ம் கல்வியாண்டில், தொலைநிலை படிப்பை நடத்த, 15ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். இந்த மாதம், 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், https://deb.ugc.ac.in/ என்ற இணையதளம் வழியே விண்ணப்பித்த பின், அதன் நகல்களை ஏப்., 15க்குள், யு.ஜி.சி.,க்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் மட்டும் அளித்து விட்டால் அங்கீகாரம் பெற்றதாக கருதப்படாது.
IMPORTANT LINKS
Monday, March 6, 2023
தொலைநிலை கல்வி அங்கீகாரம்: யு.ஜி.சி., அழைப்பு
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment