Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் முளைகட்டிய தானியங்களை எந்த நேரத்திலும் சாப்பிடலாம் என்று கூறப்பட்டாலும், சில கட்டுப்பாடுகள் உள்ளதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
முளை கட்டிய தானியத்தினை பாதி சாப்பாடு, பாதி முளைகட்டிய தானியம் என்ற அளவில் உண்ண வேண்டும். முளை கட்டிய தானியம் மட்டும் சாப்பிடுதல், வெறும்வயிற்றில் சாப்பிடுதல் கூடாது. மதியம் உண்பது ரொம்ப நல்லது. ஏதேனும் ஒரு வேளைதான் உண்ண வேண்டும்.
பயன்கள் என்ன?
முளைக்கட்டிய கொள்ளு உண்பதால் உடலில் இருக்கும் வெப்பம் தணிவதுடன், தொப்பை கரைந்து, உடல் பருமனையும் குறைக்க முடியும்.
முளைக்கட்டிய கம்பு நாம் எடுத்துக்கொண்டால், உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் சரி செய்கின்றது.
பச்சைப்பயறை முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் தோல் பளபளப்பாவதுடன், நினைவாற்றல் அதிகரிப்பதுடன், மறதி நோயையும் குறைக்கின்றது.
வெந்தயத்தை முளைகட்ட வைத்து சர்க்கரை நோயாளிகள் உண்ணலாம். சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதனை கட்டுக்குள் வைத்துவிடும். மேலும் பெண்களுடைய கர்ப்பப்பை தொடர்பான நோய்கள், வெள்ளைப்படுதலை சுகப்படுத்தும்.
முளைகட்டிய உளுந்தை சாப்பிட்டால் புரதம், பொட்டாசியம், கால்சியம், நியாசின், இரும்பு, தியாமின், ரிபோஃப்ளேவின், அமினோ அமிலங்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
யார் சாப்பிடக்கூடாது?
செரிமான பிரச்சினை, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள் பச்சையாக எடுத்துக்கொள்ளாமல் வேக வைத்து சாப்பிட வேண்டும்.
காலை வெறும் வயிற்றில் இதனை எடுத்தக் கொள்ள வேண்டாம்.
No comments:
Post a Comment