Join THAMIZHKADAL WhatsApp Groups
ரத்த சோகை குறைபாட்டால் பலருக்கு, உடல் சோர்வு, பலவீனம், ரத்த குறைபாடு, ஹீமோகுளோபின், போன்றவை ஏற்படும்.
உடலில் போதுமான ஊட்டச்சத்து குறைபாட்டால் இந்த நோய் ஏற்படுகிறது. இவற்றை தடுப்பதற்கு, இரும்பு சத்து அதிகம் நிறைந்த, உணவுகளை உட்கொள்வது நல்லது.
புது ரத்தம் உருவாககி ஹீமோகுளோபின், அளவை அதிகரிக்க, ஒரு கைப்பிடி உலர் கருப்பு திராட்சை எடுத்து, இரவு ஒரு பவுலில் போட்டு தண்ணிர் சேர்த்து ஊற வைத்து, காலை மிக்சியில் அரைத்து, அந்த தண்ணீருடன் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
மற்றும் மாதுளம் பழம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். பீட்ரூட் பொரியலாகவோ, ஜூஸ் ஆகவோ, சேர்த்துக் கொள்வது நல்லது.
இதில் விட்டமின், மினரல்ஸ் ,அதிகம் நிறைந்துள்ளது.
உணவில் தினமும் ஒரு கீரை சேர்த்துக் கொள்வது நல்லது. கீரையில் அதிகப்படியான இரும்பு சத்து நிறைந்தது. மேலும் முருங்கைக்கீரையில், ஹீமோகுளோபின் அதிகரிக்க கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
விட்டமின் சி நிறைந்த, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை சேர்த்துக் கொள்வது, மற்றும் பேரிச்சம் பழத்தில் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. தினமும் நான்கு அல்லது ஐந்து பேரிச்சம்பழம் எடுத்துக் கொண்டாலே உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும்.
முட்டையில் அதிக அளவு புரோட்டின் நிறைந்துள்ளது தினமும் ஒரு முட்டை சேர்த்துக் கொள்வது நல்லது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது வெஜிடபிள் சூப், சாப்பிடுவது உடலுக்கு நல்லது. சூப் உடலில் உள்ள மூட்டுகள், எலும்புகள் போன்றவற்றை பலப்படுத்தும்.
No comments:
Post a Comment