Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 9, 2023

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று , 2022-23 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பிக்குமாறும் , மேலும் , 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை ( Renewal application ) புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பங்கள் புதியதாகவோ புதுப்பித்தல் செய்யவோ National Scholarship Portal என்ற இணையதளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டு 10.01.2023 அன்றுடன் பணிகள் முடிக்கப்பட்டது.

மேலும் , பார்வை 1 இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு விவரத்தினை புதுடில்லி , மத்திய கல்வித் துறைக்கு உரிய காலத்திற்குள் அளித்திட மாணவர்களுக்கு உரிய தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திட பள்ளித் தலைமையாசிரியர் மூலம் மாணவர்களை அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் , இதுநாள் வரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது . எனவே , மாணவர்களுக்கு உரிய தொகை சென்றடைய ஏதுவாக மாணவர்களின் ஆதார் எண்களை உடன் வங்கிக் கணக்குடன் இணைத்திட உரிய நடவடிக்கை மேற்கெள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News