Join THAMIZHKADAL WhatsApp Groups
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022 - 2023ஆம் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு 17.04.2023 முதல் 21.04.2023 வரை நடத்தப்பட வேண்டும்.
ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை
இதையடுத்து 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் நிலைக்கு தகுந்தவாறு தேர்வு நாட்களை முடிவு செய்து கொள்ளலாம். அதேசமயம் ஏப்ரல் 10 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
மற்றும் தங்களுடைய உள்ளூர் நிலைக்கு ஏற்றவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இம்மாத இறுதியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஆசிரியர், பெற்றோர்களிடம் அவர் தம் குழந்தைகளின் வருகை, கற்றல் நிலை, உடல்நலம், மன நலம்,
கற்றல் அடைவு நடவடிக்கைகள்
கல்வி இணைச் செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும். அதுமட்டுமின்றி கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் நடப்பு கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாளாக 28.04.2023 இருக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை
இதன்மூலம் வரும் ஏப்ரல் 29ஆம் தேதியில் இருந்து அடுத்த ஒரு மாதத்திற்கு கோடை விடுமுறை விடப்படும் எனத் தெரிகிறது. அதன்பிறகு ஜூன் 1 அல்லது 5ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக பின்னர் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை அவர்களுக்கென்று தனி தேர்வு அட்டவணை தயாரித்து, அதன்படி நடத்தி கொள்வர். இருப்பினும் பள்ளி வேலை நாளாக ஏப்ரல் 28ஆம் தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் முடிவில் மாற்றம் இருக்காது என்கின்றனர்
No comments:
Post a Comment