Join THAMIZHKADAL WhatsApp Groups
நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான அறிவிப்பின்படி ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் பயனாளிகள் ஓய்வூதியம் அல்லது மொத்த தொகையை பெறுவதற்கு சில ஆவணங்களை பதிவேற்றம் செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சந்தாதாரர்கள் என்பிஎஸ் வெளியேறுதல் மற்றும் திரும்ப பெறுதல் படிவம், திரும்ப பெறுதல் படிவத்தில் குறிப்பிட்டுள்ள அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்று, வங்கி கணக்கு ஆதாரம், PRAN அட்டையின் நகலை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் இது சந்தாதாரர்களின் நலனுக்காகவும் வருடாந்திர வருமானத்தை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு பயனளிக்கும் விதமாகவும் இருப்பதால் இந்த நடைமுறை கட்டாயமாகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் அனைவரும் இன்று ஏப்ரல் 1 முதல் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
No comments:
Post a Comment