Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்காக கடந்த ஆக.1-ம் தேதி நிலவரப்படி உள்ளஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) பணியிடங்கள் நிர்ணயம் செய்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து அறிக்கையாக பெறப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 3,123 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 407 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 400 மாணவர்களுக்கு மேல் இருக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் நிலை-1 பதவியில் ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர்.
183 பள்ளி களில் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பதவியில் ஆசிரியர்கள் இல்லை. ஆனால், 400-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள 163 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே, விதிகளின்படி உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் அடிப்படையில் இடமாறுதல் செய்யப்படுவர்.
இதற்கான கலந்தாய்வு, ஏப்.11-ம் தேதி இணையவழியில் நடத்தப்படும். பணி நிரவல் கலந்தாய்வுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வை நடத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment