Join THAMIZHKADAL WhatsApp Groups
ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட விடுமுறைப் பட்டியலின்படி, மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் வேலை செய்யாது.
மே மாதத்தில் வங்கி விடுமுறையில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளும் அடங்கும். ஆனால் இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் அல்லது மண்டலத்திற்கும் மாறுபடும்.
நீங்கள் சிக்கிமில் வசிப்பவராக இருந்தால், மே 15 அன்று விடுப்பு எடுத்தால், மே 13 முதல் மே 16 வரை நான்கு நாட்கள் நீண்ட வார விடுமுறையை பெறலாம். மே 13 (இரண்டாவது சனிக்கிழமை), மே 14 (ஞாயிறு), மே 16 சிக்கிம் தினம்.
விடுமுறைகள் பின்வறுமாறு...
மே 1 (திங்கட்கிழமை): மே தினம், மகாராஷ்டிரா தினம்
மே 5 (வெள்ளிக்கிழமை): புத்த பூர்ணிமா - டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரகண்ட், அசாம், பீகார், குஜராத், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர்
மே 7: ஞாயிறு
மே 9 (செவ்வாய்): ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள்
மே 13: இரண்டாவது சனிக்கிழமை
மே 14: ஞாயிறு
மே 16 (செவ்வாய்): மாநில நாள் - சிக்கிம்
மே 21: ஞாயிறு
மே 22 (திங்கட்கிழமை): மகாராணா பிரதாப் ஜெயந்தி - குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்
மே 24 (புதன்கிழமை): காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி - திரிபுரா
மே 27: நான்காவது சனிக்கிழமை
மே 28: ஞாயிறு
வங்கிகள் 12 நாட்களுக்கு வேலை செய்யாது என்றாலும், ஆன்லைன் இணைய வங்கி சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். நேரடியாக வங்கியில் இருந்து பணத்தை டெபாசிட் செய்யவோ எடுக்கவோ முடியாது, ஆனால் மீதமுள்ள இணைய சேவைகளை எந்த சிரமமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரிசர்வ் வங்கி, வங்கி விடுமுறை நாட்களை தேசிய விடுமுறை மற்றும் அரசு விடுமுறை என இரண்டு வகைகளாக வகைப்படுத்தியுள்ளது. தேசிய விடுமுறைகளில் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி என மூன்று முக்கிய நாட்கள் அடங்கும்.
இதற்கிடையில், அரசு விடுமுறைகள் மாநில அரசு வங்கி விடுமுறைகள் மற்றும் மத்திய அரசின் வங்கி விடுமுறைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு வங்கி விடுமுறைகள் நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது. அதே நேரத்தில் மாநில அரசு வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும்.
No comments:
Post a Comment