Join THAMIZHKADAL WhatsApp Groups
தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் மே 1ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்கள் மற்றும் தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டங்களில் அந்த நிதியாண்டிற்கான வரவு செலவு அறிக்கை, பணிகளின் முன்னேற்ற நிலைகள், மத்திய மாநில அரசுகளின் திட்டங்களுக்கான பயனாளர்கள் தேர்வு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். இந்த கிராம சபை கூட்டங்களில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருமே பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.
அந்தவகையில் நடப்பாண்டில் மே. 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த உத்தவிடப்பட்டுள்ளது. தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் மே.1ம் தேது கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டம் நடட்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment