Join THAMIZHKADAL WhatsApp Groups
குரு பகவான் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இதுநாள்வரை அஸ்தமன நிலையில் இருந்த குரு பகவான் இனி கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியில் உதயமாகப்போகிறார்.
குரு பெயர்ச்சியால் கிடைக்கக்கூடிய முழுமையான பலன்களும் நன்மைகளும் இனிதான் கிடைக்கப்போகிறது. குரு பகவானின் சுப பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்? யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராகு இருக்கும் இந்த சூழ்நிலையில் குருவின் பயணமும் இருப்பதால் தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். பிள்ளைகளின் வாழ்க்கையில் சுப காரியம் நடைபெறும். தொட்டது துலங்கும். பண வரவு அபரிமிதமாக இருக்கப்போகிறது. பெண்களுக்கு பொன் நகை சேர்க்கை அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகம் செல்வீர்கள். பெண்களுக்கு பதவி உயர்வும் கேட்ட இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு விரைய குருவினால் சில சோதனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் உண்டாகும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பண வரவு அதிகமாக இருந்தாலும் விரையச் செலவு இருக்கும் அதனை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். வீடு, வாகனம், நிலம் வாங்கலாம்.
மிதுனம்: லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு கிடைக்கும்.தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
கடகம்: குரு பகவான் 10ஆம் வீட்டில் பயணம் செய்வதால் திடீர் வேலை மாற்றம் நிகழும். செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். அயராத உழைப்புக்கு சொந்தக்காரர் நீங்கள். குரு பகவானின் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வையால் பண வருமானம் அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
சிம்மம்: பாக்ய ஸ்தான குரு பொன் பொருள் சேர்க்கையை தரப்போகிறார். தெய்வ அனுகூலங்கள் அதிகரிக்கும். அப்பா வழி சொத்து சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. அரசு வேலை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். அற்புதமான பொற்காலம் ஆரம்பமாகிறது. குருவின் பார்வையால் திடீர் ஜாக்பாட் மூலம் பண வரவு வரும். ஆலயங்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள்.
கன்னி: குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ராகுவினால் ஏற்பட்ட உடல் நல பாதிப்பை சற்றே குறைப்பார் குரு பகவான். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் குடைச்சல்கள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிக்கலில் தவிக்கும் உங்களுக்கு உதவிகள் தேடி வரும். உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
துலாம்: குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். குரு பார்வையால் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும் கண்டச்சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். தொழில் வியாபார கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லவும். பேச்சை குறைத்து செயலில் அதிக கவனம் செலுத்தவும்.
விருச்சிகம்: குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். குருவின் பார்வையால் பண வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக யாருக்காவது கொடுத்தால் திரும்பி வருவது கடினம். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கவனம் தேவை.
தனுசு: குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் பயணம் செய்வதால் பொன்னான காலம் பிறந்து விட்டது. புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. பொன்னவன் குருவின் பொன்னான பார்வையால் உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நிகழப்போகிறது. திடீர் பண வரவு வரும். அற்புதமான கால கட்டம் இது. சந்தோஷமாக அனுபவிக்கத் தயாராகுங்கள்.
மகரம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். வீடு மாற்றம் உண்டாகும். சில புது வீடு வாங்குவதற்கான யோகம் கைகூடி வந்துள்ளது. வேலையில் கேட்ட இடத்திற்கு இட மாற்றம் நிகழும். இந்த குரு பெயர்ச்சி மனைவி அல்லது தாய்க்கு பிரச்சினைகளை கொடுக்கும். புது முயற்சிகளில் கவனம் தேவை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கும்பம்: குரு பகவான் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வருமானம் வருவதால் கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஜென்ம சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை குரு பகவான் கட்டுப்படுத்துவார்.
மீனம்: ராசிநாதன் குரு பகவான் பணம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் திடீர் பண வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
Mesa rasi face fighting life ,after marriage very bad and sad life
ReplyDelete