Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 21, 2023

வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை.. 3 நாள் விடுமுறை.. தினமும் 12 மணி நேர பணி! புதிய சட்டம் சொல்வது என்ன?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் 12 மணி நேர வேலை சட்ட மசோதா காரணமாக வேலை செய்யும் நாட்கள் 4 ஆக குறையும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதைத்தான் 12 மணி நேரமாக மாற்றும் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

மசோதா பின்னணி: 2021 தொடக்கத்திலேயே இது தொடர்பான செய்திகள் வெளியாகின. வாரத்திற்கு வேலை நாட்களை நான்காக குறைக்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் இதில் மாநில அரசுகளின் கருத்தையும் கேட்க வேண்டும். தொழிலாளர் சட்டம் பொதுப்பட்டியல் என்பதால் மாநில அரசுகளும் இதற்கு ஏற்றபடி விதிகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாடு முழுக்க ஒரே மாதிரி தொழிலாளர் சட்டத்தை கொண்டு வர முடியும்.

அதன்படி தொழிலாளர்களின் வேலை நாட்களை 4 நாட்களாக குறைக்கவும், பணி நேரத்தை அதிகரிக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இந்த மாற்றங்களை ஏற்படுவதற்கு வசதியாக பணி விதி, ஊதிய விதி, அலுவலக உறவு மற்றும் பணி பாதுகாப்பு விதி, ஆரோக்கியமான பணி சூழல் விதி ஆகிய 4 விதிகளில் மாற்றம் ஏற்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்தது.

இதை 13 மாநிலங்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதாகவும், மேலும் சில மாநிலங்களில் ஏற்கும் முடிவில் இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பல்வேறு மாநில அரசுகள் இந்த புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டதால் வரும் ஆண்டிலேயே இந்த 4 நாள் வேலை விதிமுறை அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

மீதம் உள்ள 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

இதனால் இப்போது 8 மணி நேரமாக இருக்கும் பணி நேரம் வார விடுமுறை மாற்றம் காரணமாக 12 மணி நேரமாக மாற்றப்படும் என்றும்கூறப்பட்டது . பணிகள், உற்பத்திகள் விடுமுறையால் பாதிக்க கூடாது என்பதால் பணி நேரம் 12 மணி நேரமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டது.

தமிழ்நாடு சட்டம்: அதன்படியே தற்போது தமிழ்நாட்டில், சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஐடி நிறுவனங்கள் சில வைத்த கோரிக்கை காரணமாகவும், உற்பத்தியை பெருக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முறையை கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதற்கு முன் 8 மணி நேரத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பது நீக்கப்பட்டு உள்ளது.ஆனால் 12 மணி நேரம் என்பது கட்டாயம் கிடையாது. அதனால் 8 மணி நேரம் கட்டாயம் என்று இருப்பது போல 12 மணி நேரம் கட்டாயம் கிடையாது.12 மணி நேரம் வேண்டாம் என்றால் ஊழியர்கள் தங்கள் நிறுவங்களிடம் மறுக்க முடியும், என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் 12 மணி நேர வேலை சட்ட மசோதா காரணமாக வேலை செய்யும் நாட்கள் 4 ஆக குறையும் என்று கூறப்படுகிறது. 3 நாட்கள் விடுமுறை நாட்களாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News