Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 2, 2023

சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏப்.6-ல் வேலைவாய்ப்பு முகாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் கு. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி, சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கிப்பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் 6-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஐசிஐசிஐ வங்கிக்கு வாடிக்கையாளர் உறவு மேலாளர் (Relationship Manager) பணிக்கு தகுதியுள்ள பட்டதாரி மாணவர்கள் ஆண், பெண் இருபாலரையும் தேர்ந்தெடுப்பதற்கான வளாக வேலைவாய்ப்பு முகாம் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சுந்தரனார் அரங்கில் வரும் 6-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 2019முதல் 2022-ம் ஆண்டு வரை ஓர் இளங்கலை பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் மட்டும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவைகள் நிறுவனம் மூலமாக 21 நாள் இணையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் ஐசிஐசிஐ வங்கியில் பணியமர்த்தப்படுவர். பயிற்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை டிவிஎஸ் நிறுவனம் வங்கிகள் மூலமாக தவணை முறையில் செலுத்தவும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர். தவணை தொகையை வங்கி பணிக்கு சென்றபின் செலுத்தினால் போதுமானது.

இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவோர் பல்கலைக்கழக இணையதளத்தில் ( https://www.msuniv.ac.in/) தங்கள் சுயவிவர குறிப்பு தகவலை பதிவு செய்ய வேண்டும். நேர்காணலுக்கு வரும்போது சுயபதிவேடு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 96000 44872 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News