Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 1, 2023

கோடைக்காலம் வந்தாச்சு.. உடல் சூட்டைக் குறைக்க இந்த உணவுகளை மறக்காமல் எடுத்துக்கோங்க.!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கோடைக்காலம் என்றாலே சுட்டெரிக்கும் வெயிலும், உடல் சூடும் தான் நம்மை அச்சத்தில் ஆழ்த்தும்.


எப்படியாவது இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக மதிய வேளைகளில் பேன்கள்,ஏசியில் தான் அதிக நேரம் அமர்ந்திருப்போம். இதெல்லாம் மேலோட்டமாக வெயிலின் தாக்கத்தைக் குறைத்தால் உடலில் சூடு இருக்கத்தான் செய்யும்.எனவே தான் கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தவிர்ப்பதற்கு சில உணவுகளை நீங்கள் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதோ என்னென்ன? என வாருங்கள் நாமும் தெரிந்துக் கொள்வோம்..


பொதுவாக கோடையில் நீரேற்றமான உணவுகளைத் தவிர்ப்பது, குறைவான அளவில் தண்ணீர் குடிப்பது, எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தினமும் உட்கொள்ளும் போது உடலில் அதிக அளவு நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் பாஸ்ட் புட் உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக இயற்கையாகவே உடல் சூட்டைக்குறைத்து , உங்களது உடலைக் குளிர்ச்சியாகவும, நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவும் உணவுகளை நீங்கள் தினமும் சாப்பிட வேண்டும்.


குறிப்பாக குஸ் குஸ் புல்லின் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் குஸ் சர்பத், உங்களது உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்க உதவுகிறது மற்றும் அதிக வெப்பத்தால் கண்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் கண்கள் சிவப்பாக மாறுவதையும் குறைக்கிறது. மேலும் கோடைக்கால கிடைக்கக்கூடிய சீசனல்பழங்கள், எலுமிச்சை சாறு கலந்த சர்பத், மண்பானை தண்ணீர் ஆகியவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. மேலும் இவை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலைகள் உடல் சூட்டை நீக்குவதோடு, ஒரே நேரத்தில் உடலை நச்சுத்தன்மையற்றதாக மாற்றுவதற்கு உதவுகிறது. இதோடு நீரில் சப்ஜா விதைகளை நீங்கள் கலந்துக் குடிக்கலாம். மேலும் தேங்காய் தண்ணீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், மாதுளை போன்றவற்றை நீங்கள் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இதோடு, கடுமையான வெளியிலிலும் நமது உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் மோர், கற்றாழை, மிளகுக் கீரை, எலுமிச்சை, பால் மற்றும்தேன், வெந்தயம் போன்றவற்றையும் நீங்கள் கோடைக்காலத்தில் அதிகளவில் தினமும் சாப்பிடும் உணவுகளில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


இவ்வாறு, இது போன்ற பல்வேறு உணவு வகைகளை உங்களது அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது நிச்சயம் எவ்வளவு வெயிலில் சென்றாலும், உடல் சூடு அதிக அளவில் இருக்காது. எப்போதும் உடலை குளிர்ச்சியாகவே வைத்திருக்க முடியும். எனவே இனி நீங்களும் இந்த கோடையை சமாளிக்க இதுப்போன்ற உணவு முறைகளை பின்பற்றத் தொடங்குங்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News