Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 22, 2023

போட்டி தேர்வுகளுக்கான நவம்பர் மாத முக்கிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC , UPSC, SSC, ரயில்வே தேர்வு என்று பலதரப்பட்ட தேர்வுகளுக்கு நிறைய பேர் தயாராகிக்கொண்டு இருப்பீர்கள்.

எல்லா தேர்வுகளிலும் பொதுவாக வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், நடப்பு நிகழ்வுகள் இருக்கும். இது போன்ற பொதுவான படங்களை தினமும் கொஞ்சம் திருப்புதல் செய்ய ஏதுவாக நங்கள் தொகுத்து தர இருக்கிறோம். அந்த வகையில் இன்று நடப்பு நிகழ்வுகளை பற்றி பார்க்க இருக்கிறோம்.

போட்டி தேர்வுகளை பொறுத்தவரை தேர்வர்கள், படிக்கும் பாடங்களில் மட்டும் அல்லாது தினசரி தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்பதை சோதிப்பதற்காகவே தேர்வுகளில் குறிப்பிட்ட அளவிலான நடப்பு நிகழ்வுகள் கேட்கப்படுகின்றன. அடுத்தடுத்த மாதங்களில் தேர்வுகள் வரவுள்ள நிலையில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரையான நடப்பு நிகழ்வுகளை படித்து வைத்திருப்பது முக்கியம்.

அதனால் இந்த தொகுப்பில் 2022 ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த சில முக்கிய அரசியல் அமைப்பு சார்ந்த நடப்பு நிகழ்வுகளை விரிவாக பார்ப்போம். இது உங்கள் தேர்வுக்கு முக்கிய குறிப்புகளாக அமையும்.

பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் (EWS) ஒதுக்கீடு:

செய்தியில் வரக் காரணம்: உச்சநீதிமன்ற அரசியலமைப்பு பெஞ்ச் 103 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின்படி கொண்டுவரப்பட்ட கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் EWS க்கான 10% ஒதுக்கீடு சட்டப்படி செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

  • சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டைத் தாண்டி மக்களின் பொருளாதார நிலையின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்படும்.

  • இதை 2010 இல் அறிக்கை சமர்ப்பித்த சின்ஹோ கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

  • இதற்காக 103வது திருத்தச் சட்டம் 2019 அரசியலமைப்பில் 15(6) மற்றும் 16(6) பிரிவுகளை சேர்த்து. இதன்மூலம் ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டி அல்லாத பிரிவினர்இந்த ஒதுக்கீட்டை பெற முடியும்.



  • எனினும், மாநில அரசு வேலைகளில் அல்லது கல்வி நிறுவனங்களில் இந்த ஒதுக்கீட்டை வழங்கலாமா வேண்டாமா என்பதை மாநில அரசு முடிவு செய்யும்.

  • அதேநேரம் இதோடு சேர்த்த மொத்த ஒதுக்கீட்டு விழுக்காடு இந்திரா சாவ்னி வழக்கு, 1992- படி 50% க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • வருடத்திற்கு 8 லட்சத்திற்கு குறைவான குடும்ப வருமானம் உள்ள அனைவரும் இந்த பிரிவின் கீழ் பயன்பெற முடியும்.


இ-கோர்ட் மிஷன்

  • இ-கோர்ட் மிஷன் (2007) என்பது ஒரு தேசிய மின்-இயக்க நீதிமன்றங்களை உருவாக்கும் திட்டமாகும்.

  • இணைய ஆளுமை (E -GOVERNANCE ) திட்டம் மூலம் ICT இயக்கத்திற்கான மின்னணு மாவட்ட & துணை நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

  • இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மின் கமிட்டியால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது.



மின் நீதிமன்றங்களின் நன்மைகள்

  • நீதிமன்றம் மற்றும் வழக்குகளை திறம்பட நிர்வகித்தல்

  • நீதிமண்ட செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல்

  • நிலுவையில் உள்ள வழக்குகளை சீக்கிரம் தீர்த்து வைத்தல்

  • எல்லோரும் அணுகக்கூடிய, விலை குறைவான நீதிமன்ற செயல்பாடுகளை கொண்டுவர இந்து பெரிதும் உதவும்


இதையும் பாருங்க :போட்டித்தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளை எப்படி படிப்பது எதை படிப்பது?

ஆதார் விதிகள் புதுப்பிக்கப்பட்டன

  • UIDAI என்பது ஆதார் சட்டம் 2016 இன் விதிகளைப் பின்பற்றி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்திய அரசாங்கத்தால் 12 ஜூலை 2016 அன்று நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஆணையமாகும்.

  • இதன் கீழ் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள ஒதுக்கப்பட்டது. பின்னர் அனைத்து முக்கிய ஆதாரங்களான பான் கார்டு, மின் இணைப்பு என்று எல்லாவற்றையும் இந்த எண்ணுடன் இணைக்க அரசு உத்தரவிட்டது.



  • தற்போது இந்த ஆதார் விதிகள் புதுப்பிக்கப்பட்டு ஆதார் வைத்திருப்பவர்கள் "குறைந்தது 10 ஆண்டுக்கு ஒருமுறை" அவரது தகவல்களை புதுப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • மேம்படுத்தல் சார்ந்த துல்லியத்தை CIDR உறுதி செய்யும். CIDR என்பது அனைத்து ஆதார் தொடர்புடைய மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை கொண்ட மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது.


நடப்பு நிகழ்வுகளை புல்லட்டின்களாக எழுதி வைத்து படிப்பது எளிதாக திருப்புதல் செய்ய உதவும். தேர்வுகளுக்கு தயாராகுங்கள்.அடுத்தடுத்து நடப்பு நிகழ்வுகளில் தொகுப்பை திருப்புதல் செய்வோம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News