தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும்.
இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தூதுவளைப் பூக்கள் வரப்பிரசாதமாகும்.
தினம் இரண்டு பூக்களை எடுத்து மென்று தின்று வர உடல் பளபளப்பாக மாறும். என்றும் இளமை நீடிக்கும். தூதுவளைப் பூக்களை 15 எடுத்து 200 மில்லி லிட்டர் நீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி பாலும் சர்க்கரையும் கலக்கிப் பருகினால் முக அழகு கிடைக்கும்.உடல் வலுவடையும் தூதுவளைப்பூக்களை நெய் விட்டு வதக்கி தயிர் சேர்த்து பச்சடி போல செய்து சாப்பிட ருசியாக இருக்கும், உடல் வலுவடையும். தூதுவளைப் பூக்களைச் சேகரித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்த வேண்டும்.
ஒரு டீஸ்பூன் பூவை காய்ச்சிய பசும்பாலில் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து இரவில் ஒருவேளை மட்டும் அருந்தவும். இதனால் நரம்புகள் இறுகும். உடல் உறுதி பெறும். ஆண்மையை பெருக்கும் தன்மை தூதுவளை பூவிற்கு உள்ளது.
No comments:
Post a Comment