Join THAMIZHKADAL WhatsApp Groups
மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீர் குடித்து விழுங்குபவர்கள் உண்டு. சிலர் எதையும் போடாமல் வெறும் மாத்திரையை வாயில் இட்டு கசப்பு இருந்தாலும் சப்பி கரைத்து விழுங்குவார்கள்.
இன்னும் சிலர் காபி, டீ, பால், குளிர்ந்த நீர் என்று எது கிடைத்தாலும் அதில் மாத்திரை போட்டு கொள்வார்கள். ஆனால் இவை எல்லாமே தவறான முறையாகும்.
அந்த வகையில் பாலுடன் மாத்திரைகள் எடுத்து கொள்ளும் போது பாலில் இருக்கும் புரதமும், கால்சியமும் மாத்திரையில் இருக்கும் மருந்தின் வீரியத்தை குறைத்து வேலை செய்ய விடாமல் தடுக்கிறது.
இதனால், மருந்தில் இருக்கும் சத்துக்களை உடல் உறிஞ்சி கொள்ள முடியாமல் உடல் கழிவோடு மருந்தும் கழிவாக வெளியேற்றப்படுகிறது.
மேலும், மாத்திரைகளை போடுவதற்கு முன்பும் மாத்திரைகள் எடுத்து கொண்ட பின்பும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும்.
எந்த மாத்திரையாக இருந்தாலும் நீங்கள் வாயில் தண்ணீர் ஊற்றி அதில் மாத்திரையை போட்டு விழுங்குவதுதான் சரியான முறை ஆகும். அப்படி செய்யும் போது மாத்திரை எங்கும் தடையில்லாமல் உணவுக்குழாயில் செல்லும்.
குளிர்ந்த நீரில் குடிக்கும் போது மாத்திரை செயல்படும் நேரம் தாமதமாகும். இயன்றவரை வெதுவெதுப்பான நீரில் மாத்திரை எடுத்துக்கொள்வது சரியானது.
No comments:
Post a Comment