Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆரஞ்சு பழத்தில் கலோரிகள், நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு, வைட்டமின் சி, போலேட், கால்சியம், பொட்டாசியம் இப்படி பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
ஆரஞ்சு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஆரஞ்சு பழத்தில் தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் பி-6, ஃபோலேட், பாந்தோதெனிக் அமிலம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீஸ், செலினியம் மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளன. கூடவே வைட்டமின்-சி உள்ளது. இவை அனைத்தும் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை மிகவேகமாக அதிகரிக்கிறது. இதனால் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கிறது.
ஆரஞ்சு பழம் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் விரைவில் வயதாகும் அறிகுறிகளை குறைக்கிறது. மேலும் ஃப்ரீ ரேடிக்கல்கள் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் இது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுவதோடு, இதில் இருக்கக்கூடிய மக்னீசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது ஆரஞ்சுப்பழம். ஆரஞ்சுப்பழத்தில் இருக்கும் பாலிமெதாக்சிலேட்டட் ஃபிளாவோன்ஸ் (PMFs) எனப்படும் கலவைகள் உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கும் திறனை கொண்டுள்ளது.
ஆரஞ்சு பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் இருக்கக்கூடிய வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் உட்பட ஆரஞ்சுகளில் காணப்படும் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாவர கலவைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு அவற்றை சரியான அளவில் உட்கொண்டால் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். தொடர்ந்து ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வரும்பொழுது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்க் காரணங்களை குறைக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தை ஜூஸாக்கி குடிப்பதை விட அப்படியே சாப்பிடுவது அதிக ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட பிறகு ஒரு சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுபவர்கள் அதை தவிர்ப்பது நல்லது. நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதில் இருக்கக்கூடிய சிட்ரிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் நெஞ்சு எரிச்சலை அதிகப்படுத்தும்.
No comments:
Post a Comment