Join THAMIZHKADAL WhatsApp Groups
பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு பித்த வெடிப்பை சரி செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
நாம் எல்லாருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை காலில் ஏற்படக்கூடிய பித்த வெடிப்பு. காலில் ஏற்படக்கூடிய இந்த பித்த வெடிப்பானது காலின் அழகை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் காலை கீழே வைக்க முடியாத அளவுக்கு வலியை ஏற்படுத்தும்.
பித்த வெடிப்பும் அதனால் ஏற்படும் கால் வலியில் இருந்தும் ஈசியா நிவாரணம் பெறலாம். இதுக்காக ஒரு ஐந்து நிமிடம் செலவு செய்தால் போதும். அது என்னவென்று பார்ப்போம்.
ஸ்டெப் 1 :
ஒரு அகலமான டப்பில் கை பொறுக்கும் அளவு சுடு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட்டு கரைத்துக் கொள்ளவும். பிறகு இதில் இரண்டு கால்களையும் ஐந்து நிமிடம் வைத்திருக்கவும்.
பின்னர் கால்களை வெளியே எடுத்து கோல்கேட் பேஸ்ட்டை விரல் நகங்களின் மேல் தடவவும். இதன் மூலம் கால் நகங்களின் இடுக்குகளில் உள்ள தொற்றுகள் சரியாகும். பேஸ்ட் வைத்ததும் குளிக்கும் ஸ்கிரப் கொண்டு நகங்கள் மற்றும் பாதம் முழுவதும் நன்கு தேய்க்கவும். இதனால் கால்கள் மென்மையாக மாறும்.
ஸ்டெப் 2 :
நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை எடுத்துக் கொண்டு அதை இரண்டாக கட் பண்ணவும். அதில் ஒரு பாதியை எடுத்துக்கொண்டு இரண்டு கால்களிலும் தேய்க்கவும். பிறகு காலை சுத்தம் செய்யவும்.
டப்பில் உள்ள தண்ணீரை மாற்றிவிட்டு அடுத்து கட் பண்ணி வைத்த மற்றொரு பாதி தக்காளியில் சர்க்கரையை சேர்த்து இரண்டு கால்களிலும் 5 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். காலில் வெடிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இவ்வாறு செய்ய இதன் மூலம் காலில் உள்ள இறந்த செல்கள் உதிரும். அடுத்து அதிலேயே கடலை மாவு தொட்டு இரண்டு கால்களிலும் தடவி 2 அல்லது 3 நிமிடங்கள் காலை அப்படியே வைத்திருக்கவும். பின்னர் பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப் புதிதாக ஒன்று எடுத்துக் கொண்டு கால் முழுவதையும் நன்கு தேய்க்கவும். இதன் மூலம் வெடிப்பில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து கால்கள் மென்மையாக மாறும். காலை நன்றாக சுடு தண்ணீரில் கழுவி விட்டு ஒரு துணி கொண்டு துடைக்கவும்.
பின்னர் வாசலின் எடுத்து இரண்டு கால்களிலும் நன்கு தடவவும். பகல் நேரம் என்றால் வாசலின் தடவலாம். இதுவே நீங்கள் தூங்குவதற்கு முன்பு செய்தால் தேங்காய் எண்ணெய் தடவி காலுக்கு சாக்ஸ் போட்டுக் கொண்டு தூங்கலாம். முதல் நாளிலேயே உங்களுக்கு நல்ல ரிசல்ட் தெரிவது கண்கூடாக காணலாம். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாள் செய்து வந்தாலே போதும் பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
No comments:
Post a Comment