Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, வெயில் நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசின் சார்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக மே மாதத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விடவும் மாறுபட்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மதியம் 12 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அதேநேரம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், கோடை விடுமுறை இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க உள்ளது.
ஆகவே வெயில் மிகவும் கடுமையாக உள்ளதால் கூடுதலாக விடுமுறை வழங்கி பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுமா என்று கேள்வி எழ தொடங்கியது. இது குறித்து பேசி உள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளை தாமதமாக திறப்பது தொடர்பாக தற்போது எந்த விதமான முடிவும் மேற்கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளார்.
அதோடு வெயிலின் தாக்கத்தை பொறுத்து அதற்கு ஏற்றார் போல நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
No comments:
Post a Comment