Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 11, 2023

பான் கார்டில் பிழையா?- இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்...!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியாவில் பணப் பரிவர்த்தனை, அரசு சலுகைகள், வரிகள் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு பான் கார்டு அவசியமாகிறது. ஆதார் எண் எப்படி நமது அடையாள விவரங்களைக் காண உதவுகிறதோ, அதேபோல் தான் பான் கார்டு நமது நிதி விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது.

இப்படி பல முக்கிய நிதி தேவைகளுக்கு பயன்படும் பான்கார்டில் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். அப்படி பிழை இருந்தால், அத்தியாவசிய தேவையான வங்கி கணக்கு கூட தொடங்குவது கடினமாகும். இப்படி பான்கார்டில் பிழை இருந்தால் அதை எளிதாக ஆன்லைனிலே திருத்தம் செய்வது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

பான் கார்டு திருத்தம் செய்ய முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு இணையதள பக்கத்தில் 'அப்ளிகேஷன் டைப்' என்ற option-ஐ தேர்ந்தெடுத்து Change of Correction in Exsiting Pan Card என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பான் கார்டு திருத்தம் செய்வதற்குத் தேவையான விவரங்களை பதிவு செய்த பிறகு டிஸ்பிளேவில், பதிவு செய்ததற்கான ரிஜிஸ்டர் எண் தெரியும், அதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண் இ-மெயில் முகவரிக்கும் அனுப்பப்படும் என்பதால், உள்ளே கொடுக்கும் விவரங்களில் சரியான இ-மெயில் முகவரியை வழங்க வேண்டும்.

அடுத்ததாகத் திருத்தம் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக தற்போது பான் கார்டு பெயர், ஆதாரில் உள்ளது போன்று தான் அளிக்கப்படுகிறது என்பதால், கட்டாயம் ஆதார் நகலையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இப்படி அனைத்து விவரங்களையும் அளித்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பித்து, திருத்தம் செய்வதற்கான கட்டணத்தைச் செலுத்தினால், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்குத் திருத்தம் செய்யப்பட்ட பான்கார்டு வந்துவிடும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News