Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 18, 2023

போட்டி தேர்வுக்கு எதில் தொடங்கி எப்படி படிப்பது...? டிப்ஸ் இதோ..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
எதை படிப்பது என்பது தான். தேர்வு என்று வந்து விட்டால் பலதரப்பட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அப்போது எந்த பாடத்தை முதலில் படிக்க வேண்டும் , எதை இறுதியாக படிக்க வேண்டும் குழப்பம் உண்டாகும். அதற்கான வழிகாட்டுதலை தான் இன்று சொல்கிறோம்.
முதலில் நீங்கள் எந்த தேர்வை எழுதுகிறீர்களோ அதன் பாடத்திட்டத்தை முழுமையாக படியுங்கள். எந்த பாடங்களில் இருந்து எவ்வளவு கேள்விகள் கேட்கப்படும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அப்போது எதை ஆழமாக படிக்க வேண்டும் எதை மேலோட்டமாக படித்தால் போதும் என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்.

TNPSC, UPSC போன்ற ஆட்சிப்பணி தேர்வுகளை பொறுத்தவரை சில அடிப்படை பாடங்கள் பொதுவானவை. வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல் பாடங்கள் போன்றவை அனைத்து நிலை ஆட்சிப்பணி தேர்வுகளுக்கும் பொதுவானதாக இருக்கும்.

இவை அனைத்துமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பங்குகளை வகிக்கும். ஆண்டுக்கு ஆண்டு சில பாடங்களின் முக்கியத்துவம் அதிகமாகும். சில நேரங்களில் குறையும். அதை கணிப்பது கடினம். அதனால் இந்த அனைத்து படங்களிலும் சமமான கவனத்துடன் படிக்கவும்.

அடுத்து எந்த வரிசையில் படிப்பது என்ற குழப்பம் எழும். அதற்கான வழிகளையும் நங்கள் சொல்கிறோம். பாடத்திட்டத்தில் எந்த பகுதி உங்களுக்கு நன்றாக தெரியும்- தெரியாது-இதுவரை படித்ததே இல்லை என்பதை பிரித்து பார்த்து கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் எதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது தெரிந்துவிடும்.

இதுவரை எதையும் நான் படிக்கவே இல்லை, இப்போது தான் தொடங்க போகிறேன் என்றால் அதற்கான வரிசையை சொல்கிறோம். பொதுவாக இந்த எல்லா பாடங்களும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டது தான் . புதிதாக படிப்பவர்கள் வரலாற்றில் இருந்து தொடங்குங்கள்.

பழங்கால இந்தியாவில் கற்காலத்தில் தொடங்கி பழங்கற்காலம், மத்திய கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம், என்று வரலாற்று காலம் வரை மேலோட்டமாக படியுங்கள். வேதகாலம் தொடங்கும்போது பொது சமூக கட்டமைப்பு தொடங்கும். அதில் இருந்து கவனமாகவே படித்து வாருங்கள். 1857 வரை கவனமாக படித்து வாருங்கள். 1857 க்கு பிறகு அதீத கவனம் தேவை ஏனென்றால் அதன் பிறகு வருவது வரலாற்று பாடத்திட்டத்தில் முக்கியமானதோடு அரசியல் அறிவியல் படத்தின் பகுதியின் தொடக்கமாகும்.

வரலாறை முடிக்க முடிக்க அரசியல் அறிவியல் பாடங்களை படிக்க ஆரம்பியுங்கள். அப்போது தான் ஒரு சரியான தொடர்ச்சி இருக்கும். பாடம் என்றும் மறக்காத வண்ணம் படிக்க எளிதாக இருக்கும். அதற்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தை படிக்க ஆரம்பியுங்கள். அடிப்படை வார்த்தைகளையும் கருத்துகளையும் (concept) படித்துக்கொள்ள வேண்டும்.

அந்த கான்செப்டுகளை வைத்து நடப்பு நிகழ்வுகளை படித்தால் அதுவே போதுமானதாக இருக்கும். பொருளாதார கேள்விகளை பொறுத்தவரை, நடப்பு நிகழ்வுகள், கான்செப்ட் சார்ந்த கேள்விகள், மத்திய/ மாநில பட்ஜெட் குறித்த கேள்விகள் தான் அதிகம் கேட்கப்படும். அதனால் இதில் கவனத்தை செலுத்துங்கள்.

வரலாறு தொடங்கி பொருளாதாரம் வரை படங்களை படிக்கும்போது தினம் 1 புவியியல் பாடம் என்று எடுத்து படித்தால் நன்று. இல்லை என்றாலும் பொருளியல் முடித்த பிறகு புவியியல் பாடங்களை எடுத்து படியுங்கள். ஆனால் தினசரி செய்தி தாள், பழைய நடப்பு நிகழ்வுகளை படிப்பது சிறந்த தேர்வு தயாரிப்பு முறையாகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News