Join THAMIZHKADAL WhatsApp Groups
நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு அழற்சி போன்ற நன்மைகளை தரும் நெல்லிக்காய் வெயில் காலத்திற்கு மிகவும் நல்லது.
அதோடு வெயில் கால சரும பாதிப்புகளிலிருந்து விடுபடவும் நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது. சரி எப்படி ஜூஸ் போட வேண்டும் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் - 3
தேன் - 3 tsp
உப்பு - 1/2 tsp
தண்ணீர் - 1 கிளாஸ்
செய்முறை :
முதலில் நெல்லிக்காயை நறுக்கி மிக்ஸியில் அரைத்து அதை பிழிந்து ஜூஸை தணியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் அந்த ஜூஸை ஒரு கிளாஸில் ஊற்றி அதோடு தேன், உப்பு சேர்த்து கலந்துவிடுங்கள்.
பின் தண்ணீர் போதுமான அளவு சேர்த்து நன்கு கலந்துவிட்டு குடியுங்கள். தேவைப்பட்டால் புதினா சேர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment